Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கிய விஷ யோகம்: அடுத்த 2 நாள் இந்த 5 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..! -
3 தக்காளியும், 4 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
அக்டோபர் 24, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் வைச்சு செய்யப்போகுதாம் -
அதிசார குரு பெயர்ச்சி 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்? - ஜோதிடர் கணிப்புகள் -
குருபகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
டெல்லி ஸ்டைல் சன்னா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொடி வறுவல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா செமையா இருக்கும் -
மழைக்காலத்தில் பளிச்சுன்னு அழகாக இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க.. -
கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேணுமா? அப்ப இந்த 5 பழங்களில் ஒன்றை அடிக்கடி சாப்பிடுங்க -
வாஸ்துப்படி, வீட்டில் இந்த 5 பொருட்களை காலியா வெச்சுக்காதீங்க.. இல்ல லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவீங்க..
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
Fatty Liver Disease Signs On Face: தற்போது கொழுப்பு கல்லீரல் நோய் மிகவும் பொதுவான ஒரு பிரச்சனையாக உள்ளது. முக்கியமாக இந்த நோய் அறிகுறிகளை அதிகமாக வெளிப்படுத்தாமல் அமைதியாக உருவாகிறது. சொல்லப்போனால் இந்நோயால் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொழுப்பு கல்லீரல் நோய்க்கு ஆல்கஹால் தான் முக்கியமான காரணமாக இருந்தாலும், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், உயர் கொலஸ்ட்ரால் போன்றவைகளும் கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும்.

இந்த ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை கவனிக்காமல் விட்டுவிட்டால், பின் அது தீவிரமாகி கல்லீரல் வீக்கம், கல்லீரலில் வடு மற்றும் ஏன் புற்றுநோயை கூட ஏற்படுத்தலாம். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் ஒருவருக்கு கொழுப்பு கல்லீரல் இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை முகத்தில் ஆரம்பகாலத்தில் காட்டும். அந்த அறிகுறிகளை கவனித்தால், கொழுப்பு கல்லீரல் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம். இப்போது முகத்தில் தெரியும் கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகளைக் காண்போம்.
1. முக வீக்கம்
கல்லீரல் செயலிழப்பின் மிகவும் முக்கியமான மற்றும் முகத்தில் நன்கு தெரியக்கூடிய ஒரு அறிகுறி தான் முக வீக்கம். அதுவும் இந்த முக வீக்கமானது கண்கள் மற்றும் கன்னங்களைச் சுற்றி காணப்படும். ஏனெனில் கல்லீரலானது சரியாக செயல்படாவிட்டால், அது அத்தியாவசிய புரோட்ன்களின் உற்பத்தியைக் குறைக்கும், திரவ சமநிலை மற்றும் இரத்த ஓட்டத்தை பாதிக்கும். அதுவும் அழற்சி போன்ற எவ்வித காரணமும் இல்லாமல் தொடர்ந்து வீக்கத்தை சந்தித்தால், அது கல்லீரல் மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம். எனவே இந்த அறிகுறியை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
2. கழுத்துப் பகுதியில் கருமை
கழுத்துப் பகுதியில் கருமையான படலம் தெரிந்தால், அது இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடைய கல்லீரல் நோயின் அறிகுறியாகும். இன்சுலின் அதிகளவில் இருந்தால், அது சருமத்தில் நிறமிகளின் உற்பத்தியை தூண்டிவிட்டு, கழுத்துப் பகுதியில் கருமையை உண்டாக்கும். அதுவும் இப்படி உற்பத்தியாகும் நிறமிகளானது கழுத்துப் பகுதியில் தான் முதலில் தோன்றும். எனவே இப்படி திடீரென்று உங்களின் கழுத்து கருமையாவது தெரிந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
3. முகம் சிவந்து போவது
நாள்பட்ட கல்லீரல் பிரச்சனையானது சில சமயங்களில் முகத்தை சிவந்து போகச் செய்வதோடு, ரோசாசியா போன்ற தோற்றமளிக்கும் சிறு கட்டிகள் அல்லது தடிப்புகள் தெரியலாம். ஆனால் இதற்கு கல்லீரல் நோய் மட்டுமே காரணமல்ல என்றாலும், மற்ற அறிகுறிகளான முக வீக்கம், கழுத்துப் பகுதி கருமையாக இருப்பது போன்ற அறிகுறிகளும் தெரிந்தால், கல்லீரல் பிரச்சனையாக இருக்க வாய்ப்புள்ளது. கூடுதலாக மோசமான கல்லீரல் செயல்பாட்டினால் ஏற்படும் ஜிங்க் குறைபாடு போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள், வாயைச் சுற்றி தடிப்புகள் அல்லது லேசான எரிச்சலை உண்டாக்கலாம்.
பிற அறிகுறிகள்..
கொழுப்பு கல்லீரல் நோய் தீவிரமாகும் போது, அது பிலிரூபினை அதிகம் தேங்கச் செய்து, கண்கள் மற்றும் சருமத்தை மஞ்சள் நிறமாக மாறச் செய்து, மஞ்சள் காமாலையை உண்டாக்கலாம். சிலர் இரத்தத்தில் பித்த உப்புக்கள் அதிகம் சேர்வதால், முகத்தில் கடுமையான அரிப்பை சந்திக்கலாம். எனவே காரணமில்லாமல் ஒரு அறிகுறியை தொடர்ந்து சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
