சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Semiya Rava Kichadi With Coconut Chutney Recipe In Tamil: காலையில் ஒரே மாதிரி இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சுவையான அதே சமயம் சத்தான ஒரு டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் சேமியா ரவா கிச்சடியை செய்யுங்கள். காய்கறிகள் சேர்த்து கிச்சடி செய்யும் போது, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து நாள்முழுவதும் உடலும் ஆரோக்கியமாக செயல்படும். இந்த கிச்சடிக்கு தேங்காய் சட்னி சூப்பரான காம்பினேஷனாக இருக்கும்.

Semiya Rava Kichadi With Coconut Chutney How To Make This Healthy Breakfast Recipe

உங்களுக்கு இந்த சேமியா ரவா கிச்சடி மற்றும் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேமியா ரவா கிச்சடி மற்றும் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுப்பதற்கு..

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெள்ளை ரவை - 1 கப்
* வறுக்காத சேமியா - 1 கப்

தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 5
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 6 (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 5 கப்
* வறுத்த ரவை மற்றும் சேமியா
* கொத்தமல்லி - சிறிது
* நெய் - 1 டீஸ்பூன்

சட்னிக்கு...

* தேங்காய் - 1 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, ரவையை சேர்த்து நன்கு வறுத்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் மீண்டும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் சேமியாவை சேர்த்து வறுத்து, அதையும் தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, மிதமான தீயில் வைத்து மூடி வைத்து 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் 5 கப் நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து கலந்து, மூடி வைத்து நீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள ரவை மற்றும் சேமியாவை சேர்த்து கிளறி விட வேண்டும். நீர் வற்றி கெட்டியாகத் தொடங்கியதும், தீயைக் குறைத்து, அதில் கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்து கிளறி மூடி வைத்து, 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான சேமியா ரவா கிச்சடி தயார்.
* அடுத்து சட்னி செய்வதற்கு, மிக்சர் ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்க்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், தேங்காய் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 15, 2026, 7:23 [IST]
Desktop Bottom Promotion