Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ?
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும்
Bengali Egg Pulao Recipe in Tamil: மதியம் சிம்பிளாக அதேசமயம் சுவையான ஒரு சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பாசுமதி அரிசியும், முட்டையும் உள்ளதா? அப்படியானால் அதை வைத்து வீடே மணக்கும் படி பெங்காலி ஸ்டைல் முட்டை புலாவை செய்து பாருங்கள். முட்டையை வழக்கமாக பொரியல் அல்லது குழம்புதான் செய்வோம். ஆனால் இந்த முட்டை புலாவ் இதுவரை நீங்கள் சாப்பிடாத சுவையில் இருக்கும்.

ஒரே மாதிரியான புலாவ், பிரியாணி சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த பெங்காலி முட்டை புலாவ் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்த பெங்காலி முட்டை புலாவ் ஒரு ஒன்பாட் ரெசிபி என்பதால், காலையில் செய்து குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிற்கும் செய்து கொடுக்கலாம். இந்த ஒரு சிம்பிளான முட்டை புலாவ் சிக்கன் பிரியாணியே தோற்கும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.
உங்களுக்கு பெங்காலி ஸ்டைல் முட்டை புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெங்காலி முட்டை புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 4 ஸ்பூன் நெய்
- 2 கப் பாசுமதி அரிசி
- 2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- ½ கப் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய் நீளமாக கீறியது
- 5 வேகவைத்த முட்டைகள்
- 1 நறுக்கிய தக்காளி
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- அரை ஸ்பூன் மிளகாய் தூள்
- 2 ஸ்பூன் பிரியாணி மசாலா
- ¼ கப் நறுக்கிய புதினா இலைகள்
- ¼ கப் கெட்டித் தயிர்
- 4 கப் தண்ணீர்
- தேவையான பொருட்கள்
முழு மசாலாப் பொருட்கள்:
- 1 அன்னாசிப் பூ
- 1 பிரியாணி இலை
- ½ ஸ்பூன் சீரகம்
- 3 ஏலக்காய்
- 4 கிராம்பு
- 1 அங்குல பட்டை
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் அரிசியைப் போட்டு, மூன்று முறை நன்றாகக் கழுவவும். அதை 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து, பின்னர் நீரை வடித்துவிட்டு அரிசியை தனியே எடுத்து வைக்கவும்.
- அரிசி ஊறும் நேரத்தில், முட்டைகளை வேகவைத்து அவற்றை உரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு முள் கரண்டியால் முட்டைகளில் ஆங்காங்கே சில கீறல்களை ஏற்படுத்தி, அவற்றை தனியே எடுத்து வைக்கவும்.
- வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
- நெய் சூடானதும் அதில் அன்னாசிப்பூ, பிரியாணி இலை, சீரகம், ஏலக்காய், கிராம்பு மற்றும் பட்டை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் நீளமாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- அதன்பின் முட்டை, தக்காளி, புதினா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய புதினா இலைகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் தயிரை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். கலவை நன்றாகக் கெட்டியாகும் வரை கிளறவும்.
- அதன்பின் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் மற்றும் பிற பொருட்களை ஒன்றாகக் கலந்து, உப்பு காரத்தை சரிபார்க்கவும்.
- தண்ணீர் நன்கு கொதித்ததும் கழுவி வைத்த அரிசியை சேர்த்து கிளறவும்.
- பின்னர் குக்கரை மூடி விசில் போட்டு ஒரு விசில் வரும் வரை சமைக்கவும்.
- குக்கரில் உள்ள அழுத்தம் குறைந்ததும் மூடியைத் திறந்து, கரண்டியை திருப்பி மெதுவாகக் கிளறி விடவும்.
- அவ்வளவுதான் கமகமக்கும் பெங்காலி முட்டை புலாவ் ரெடி!



Click it and Unblock the Notifications
