செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது!

Mars Transit In Cancer 2026: வேத ஜோதிடத்தில் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாகவும், கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். தற்போது செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.

Mars Transit In Cancer 2026 These Zodiac Signs Will Get Financial Benefits

இந்நிலையில் இந்த செவ்வாய் செப்டம்பர் 18 ஆம் தேதி சந்திரனின் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசி செவ்வாய் நீச்சமடையும் ராசியாகும். ஆனால் இந்த ராசியில் குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் செவ்வாயின் நீச்ச விளைவு குறையும் மற்றும் இந்த கடக ராசியில் குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கையும் நிகழ்வதால், 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் அதன் தாக்கம் தெரியும்.

அதில் சில ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவில் நிதி நன்மைகளைப் பெறவுள்ளனர். அதுமட்டுமின்றி, தொழில், வியாபாரம், வேலை போன்றவற்றிலும் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது கடக ராசிக்கு செவ்வாய் செல்வதால் எந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறவுள்ளனர் என்பதைக் காண்போம்.

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். அதுவும் குருவுடன் சேர்ந்து பயணிக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். முடிக்க முடியாமல் இருந்த பல வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதனால் பண பிரச்சனைகள் முடிக்கு வரும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று, குரு பகவானுடன் சேர்ந்து பயணிக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலம் ஏற்றதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று, குரு பகவானுடன் சேர்ந்து பயணிக்கவுள்ளார். இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். வியாபாரிகள் முதலீடுகளில் இருந்து நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion