கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும்

Posted By:

Konkani Chana Masala Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? சப்பாத்தி என்றாலே கண்ணை மூடிக்கொண்டு உருளைக்கிழங்கு குருமாவை செய்பவரா நீங்கள்? புதிதாக ஏதாவது சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? அப்படினா சுண்டலை வைத்து ஒரு சூப்பரான மடல் செய்யுங்க. அதையும் மங்களூர் ஸ்டைலில் செய்யுங்க. வித்தியாசமா சூப்பரா இருக்கும்.

Konkani Chana Masala Recipe How to Make at Home in Tamil

இந்த மங்களூர் ஸ்டைல் சுண்டல் உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும், சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சுண்டல் மசாலா வேலைக்கு செல்வோர் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாக இருக்கும். இந்த மசாலா சுவையானதாக இருப்பதோடு ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

உங்களுக்கு மங்களூர் ஸ்டைல் சுண்டல் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மங்களூர் சுண்டல் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- கொண்டைக்கடலை - 3/4 கப்
- உருளைக்கிழங்கு - 2 (தோல் நீக்கி நறுக்கியது)
- தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- துருவிய தேங்காய் - கால் கப்
- வர மிளகாய் - 4
- சீரகம் - 1 ஸ்பூன்
- புளி - சிறிதளவு
- கடுகு - அரை ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - 2 கொத்து
- எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை:

- இரவு முழுவதும் 2 கப் தண்ணீரில் கொண்டைக்கடலையை ஊறவைக்கவும். இரவு செய்வதாக இருந்தால் காலையிலேயே ஊற வைக்கவும்.

- சமைப்பதற்கு முன் தண்ணீரை வடித்துவிட்டு, கொண்டைக்கடலையுடன் 2 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, அது நன்கு வேகும் வரை பிரஷர் குக்கரில் சமைக்கவும்.

- அதே நேரத்தில், ஒரு வாணலியில் தண்ணீரை ஊற்றி சூடாக்கவும்.

- பின்னர் கொதிக்கும் நீரில் உருளைக்கிழங்கைச் சேர்த்து, மென்மையாகும் வரை வேகவைக்கவும்.

- உருளைக்கிழங்கு வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு, தனியாக எடுத்து வைக்கவும்.

- கொண்டைக்கடலை வெந்தவுடன், அதனுடன் சேர்த்து வேகவைத்த தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.

- ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, வர மிளகாயை வறுக்கவும். பின்னர் இதை ஆற வைக்கவும்.

- அதே வாணலியில் புளி மற்றும் துருவிய தேங்காயைச் சேர்த்து, தேங்காய் பழுப்பு நிறமாக மாறும் வரை மிதமான தீயில் வறுக்கவும். இதையும் ஆற வைக்கவும்.

- ஆறிய பிறகு, தேங்காய், புளி, வர மிளகாய் மற்றும் சீரகம் ஆகியவற்றை அரை கப் தண்ணீருடன் சேர்த்து, மிக்சியில் மென்மையான விழுதாக அரைத்து தனியே வைக்கவும்.

- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் உருளைக்கிழங்கு மற்றும் கொண்டைக்கடலையைச் சேர்க்கவும்.

- அத்துடன் வேகவைத்த தண்ணீர், மஞ்சள் தூள், ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் உப்பு ஆகியவற்றையும் சேர்க்கவும்.

- மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

- இப்போது அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

- குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.

- ஒரு வாணலியில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

- தாளித்த கலவையை குழம்பில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

- இந்த அட்டகாசமான மசாலாவை சூடான சாதம், சப்பாத்தி அல்லது பூரியுடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 15, 2026, 21:53 [IST]
Desktop Bottom Promotion