Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
1 வருடம் கழித்து மீன ராசிக்கு செல்லும் புதன்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது...
Mercury Transit In Pisces On 11 April 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், மிகவும் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். அதுவும் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர்.
தற்போது புதன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 11 ஆம் தேதி புதன் குரு பகவானின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசிக்கு புதன் சுமார் 12 மாதம் கழித்து நுழையவுள்ளார். இந்த புதன் பெயர்ச்சியின் தாக்கமானது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதோடு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். இப்போது 1 வருடம் கழித்து குரு பகவானின் மீன ராசிக்கு செல்லும் புதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். முக்கியமாக வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பங்குச் சந்தையில் முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம். ஆனால் அப்படி முதலீடுகளை செய்யும் போது அவசரப்பட்டு முடிவெடுக்காமல் சற்று எச்சரிக்கையாக ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செய்ய வேண்டும். பிள்ளைகளால் நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
கும்பம்
கும்ப ராசியின் இரண்டாவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பேச்சுத்திறன் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் பாராட்டுக்களை பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறலாம். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். பேச்சால் அனைவரையும் ஈர்ப்பீர்கள். இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப கிடைக்காது.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் செயல்திறன் அதிகரிக்கும். இருந்தாலும் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



