Latest Updates
-
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
குரு-செவ்வாய் உருவாக்கும் கேந்திர யோகம்: ஏப்ரல் 2-க்கு பின் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Mars Jupiter Make Kendra Yog After 02 April 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய், 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். தற்போது செவ்வாய் கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த செவ்வாய் ஏப்ரல் 02 ஆம் தேதி குரு பகவானின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இப்படி மீன ராசிக்கு செவ்வாய் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதுவும் செவ்வாய் மீன ராசிக்குள் நுழையும் போது, குரு பகவான் மிதுன ராசியில் இருப்பார். இதனால் செவ்வாய் மற்றும் குருவின் சேர்க்கை நேரடியாக ஏற்படாமல் இருந்தாலும், அதன் நிலைகளால் கேந்திர யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகமானது மே 11 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இந்த சுப யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது குரு செவ்வாயால் உருவாகும் கேந்திர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
செவ்வாய் மற்றும் குருவால் உருவாகும் கேந்திர யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் முயற்சித்தால் நல்ல வேலை கிடைக்கும். மேலும் வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வருமானத்தில் உயர்வு ஏற்படும் அதே வேளையில் செலவுகளும் அதிகரிக்கும். அதோடு ஆரோக்கிய விஷயத்திலும் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
செவ்வாய் மற்றும் குருவால் உருவாகும் கேந்திர யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவார்கள். அதாவது ஏதாவது ஒரு நடக்க வேண்டுமென்று விரும்பினால், அது வெற்றிகரமாக நடக்கும். பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். இருப்பினும், வாழ்க்கை சற்று மெதுவாக செல்வது போன்று இருக்கும். இருந்தாலும், பொறுமையாக இருக்க வேண்டும். ஆணவத்தை தவிர்க்க வேண்டும். குடும்பத்தினருடன் பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கும்பம்
செவ்வாய் மற்றும் குருவால் உருவாகும் கேந்திர யோகத்தால் கும்ப ராசியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



