ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!

Mars Transit In Thiruvathirai Nakshatra On 12 August 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்கள் மட்டுமின்றி, நட்சத்திர மாற்றங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்கின்றன. அப்படி கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார்.

Mars Transit In Thiruvathirai Nakshatra On 12 August 2026 These Zodiac Signs Luck Will Shine

தற்போது செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி, அதாவது இன்று செவ்வாய் நட்சத்திரத்தை மாற்றுகிறார். அதுவும் இந்த பெயர்ச்சியின் போது செவ்வாய் திருவாதிரை நட்சத்திரத்திற்கு செல்கிறார். இந்த திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி ராகு. செவ்வாய் ராகுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

முக்கியமாக செவ்வாய் இந்த நட்சத்திரத்தில் செப்டம்பர் 02 ஆம் தேதி வரை இருப்பார். செவ்வாயின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கத்தால் சில ராசிக்காரர்கள் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கன்னி

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். மன தைரியம் அதிகரிக்கும். அச்சமின்றி ரிஸ்க்குகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியுள்ளவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

துலாம்

செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பண பிரச்சனைகள் தீரும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தினருடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணம் மிகவும் இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். குடும்ப சூழல் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

மீனம்

செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு இனிவரும் நாட்கள் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு குறையும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல செய்தியை பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். இக்காலத்தில் எடுக்கும் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, August 12, 2026, 16:32 [IST]
Desktop Bottom Promotion