Latest Updates
-
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா?
சொந்த வீடு வாங்க வேண்டுமென்பதுதான் மிடில் கிளாஸ் மக்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய ஆசையாகும். ஆனால் தற்போது மாறிவரும் உலகச் சூழலும், விலைவாசி உயர்வும் சொந்த வீடு என்பதை எட்டாக்கனியாக மாறிவருகிறது. நிலம் மற்றும் கட்டிடங்களின் விலை உயர்வால் பலருக்கும் சொந்த வீடு வாங்குவது கடினமாகிவிட்ட இன்றைய உலகில் ஒரேயொரு நாடு மட்டும் ஒட்டுமொத்த உலகிலும் விதிவிலக்காக உள்ளது.

அது ஐரோப்பாவில் உள்ள ருமேனியாதான். ஐரோப்பிய நாடான இதில், சுமார் 96 சதவீத குடிமக்கள் தங்கள் சொந்த வீடுகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. இது உலகின் மற்ற எந்தவொரு நாட்டையும் விட மிக உயர்ந்த வீட்டு உரிமையாளர் விகிதங்களில் ஒன்றாகும். இந்த நாடு எப்படி குடிமக்களுக்கு சொந்த வீட்டை வழங்கியது எபப்டியென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வீட்டுவசதி அமைப்பை மாற்றியமைத்த கம்யூனிசம்
1947 முதல் 1989 வரை ருமேனியா கம்யூனிச ஆட்சியின் கீழ் இருந்தது. இந்தக் காலகட்டத்தில், நகரங்களிலும் சிறு நகரங்களிலும் அரசாங்கம் பெருமளவிலான கான்கிரீட் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டியது. கம்யூனிச ஆட்சியில் சொத்துக்களைத் தனிப்பட்ட முறையில் சொந்தமாக்கிக்கொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்ததால், பெரும்பாலான குடிமக்கள் அரசாங்கத்திற்குச் சொந்தமான இந்தக் குடியிருப்புகளிலேயே வசித்து வந்தனர். அதற்காக அவர்கள் மிகக் குறைந்த வாடகையையே செலுத்தினர்.
குடிமக்களில் அரசாங்கத்திற்கு வாடகை செலுத்தினர்
கம்யூனிச ஆட்சியில், வீட்டு வசதி பெரும்பாலும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. மக்களுக்கு வீடுகள் கிடைத்தன என்றாலும், அவர்கள் அடிப்படையில் அரசாங்கத்தின் குத்தகைதாரர்களாகவே இருந்தனர். குடியிருப்புச் சொத்துக்களின் மீதான தனிநபர் உரிமை அரிதாகவே இருந்தது; நகர்ப்புற மக்கள் தொகையில் பெரும்பகுதியினர் அரசு வழங்கிய வீட்டு வசதியையே சார்ந்திருந்தனர்.
கம்யூனிச வீழ்ச்சியால் ஏற்பட்ட மாற்றம்
1989-இல் கம்யூனிசத் தலைவர் நிக்கோலே சௌசெஸ்குவின் வீழ்ச்சிக்குப் பிறகு, ருமேனியா பெரும் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களைச் சந்தித்தது. 1990-களின் தொடக்கத்தில், புதிய அரசாங்கம் வீட்டுவசதித் துறையை மாற்றியமைத்து பரந்த அளவிலான தனியார்மயமாக்கல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.
மக்களின் சொந்த வீடு கனவு
கம்யூனிச வீழ்ச்சிக்கு பிறகு செய்யப்பட்ட மாபெரும் சீர்திருத்தங்களில் ஒன்றின் மூலம், அரசுக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை நேரடியாக அரசிடமிருந்தே விலைக்கு வாங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. கடும் பணவீக்கம் மற்றும் நாணயத்தின் மதிப்பு சரிவு காரணமாகச் சொத்துக்களின் விலை மிகக் குறைவாக இருந்ததால், பல குடும்பங்களால் வெறும் சில மாத கால சேமிப்பைக் கொண்டே தாங்கள் குடியிருந்த வீடுகளை சொந்தமாக வாங்க முடிந்தது.
ருமேனியாவின் வெற்றிப் பயணம்
இந்தச் சீர்திருத்தங்களின் விளைவாக, வாடகை வீட்டிலிருந்த லட்சக்கணக்கான மக்கள் விரைவாகவே வீட்டு உரிமையாளர்களாக மாறினர். இன்று, வீட்டு உரிமையாளர் விகிதத்தில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக ருமேனியா திகழ்கிறது. பல நாடுகள் வாடகை உயர்வு மற்றும் வீட்டுப் பற்றாக்குறை போன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், ருமேனியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாற்றம், பெரும்பாலான குடிமக்கள் சொந்த வீடுகளில் வசிக்கும் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கியுள்ளது.



Click it and Unblock the Notifications

