4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்

Posted By:

Tawa Egg Pepper Fry Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை செய்வீர்களா? எப்போதும் முட்டையை ஒரே சுவையில் தான் செய்வீர்களா? முட்டையை எப்போதும் ஆம்லெட், கிரேவி, பொடிமாஸ் என்று தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை முட்டையை வைத்து இந்த சைனீஸ் முட்டை வறுவலை செய்யுங்கள். இந்த சைனீஸ் முட்டை மசாலா பிரியாணி, சாதம், சப்பாத்தி என அனைத்திற்கும் செம காம்பினேஷனாக இருக்கும்.

Tawa Egg Pepper Fry Recipe How to Make at Home in Tamil

இந்த சைனீஸ் முட்டை மசாலா ரெஸ்டாரண்ட்களில் சாப்பிடும் சுவையிலேயே இருக்கும். இப்படி வித்தியாசமான முட்டை மசாலா செய்தால், வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்த சுவையில் இருக்கும். இந்த சைனீஸ் முட்டை மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு சூப்பரான சைனீஸ் முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சைனீஸ் முட்டை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 4 வேக வைத்த முட்டைகள்
- ¼ ஸ்பூன் உப்பு
- 4 ஸ்பூன் வெண்ணெய்
- 1 பெரிய வெங்காயம் (நறுக்கியது)
- 3 பூண்டு பல் (நறுக்கியது)
- 1 கப் நறுக்கிய குடைமிளகாய்
- 3 ஸ்பூன் தக்காளி சாஸ்
- 1 பச்சை மிளகாய்
- 2 மேசைக்கரண்டி கொத்தமல்லி

மசாலா பொருட்கள்:

- ½ ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் சீரகத் தூள்
- ½ ஸ்பூன் உப்பு
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- ½ ஸ்பூன் மிளகுத் தூள்

செய்முறை:

- முதலில் முட்டைகளை மூழ்கும் அளவு தண்ணீரில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

- முட்டைகள் வெந்து கொண்டிருக்கும்போதே, பூண்டு, வெங்காயம் மற்றும் குடைமிளகாய் ஆகியவற்றை நறுக்கிக்கொள்ளலாம். அத்துடன் மசாலா கலவையையும் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

- முட்டைகள் வெந்ததும் தோல் உரித்து பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

- ஒரு தவாவில், மிதமான தீயில் வெண்ணெயை உருக்கவும். முட்டையை இதில் போட்டு சிறிதளவு உப்பு சேர்க்கவும்.

- முட்டைகளைத் திருப்பாமல், மஞ்சள் கருவும் முட்டையின் ஓரங்களும் பொன்னிறமாகும் வரை 3-4 நிமிடங்கள் வேகவிடவும்.

- ஒரு கரண்டியைப் பயன்படுத்தி முட்டைகளைத் திருப்பிப் போட்டு, மறுபக்கமும் வேகவிடவும்.

- முட்டைகள் நன்றாக வதங்கியதும், பூண்டு, வெங்காயம், குடைமிளகாய் மற்றும் பச்சை ஆகியவற்றை சேர்த்து, ஒரு கரண்டியால் 10 முதல் 20 வினாடிகள் வரை மெதுவாகக் கிளறவும்.

- அதன்பின் மசாலாப் பொடிகள் மற்றும் தக்காளி சாஸை சேர்க்கவும். மெதுவாகக் கலந்து, முட்டையின் மஞ்சள் கருக்கள் உடையாதவாறு மேலும் 30-40 வினாடிகள் வதக்கவும்.

- இறுதியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைச் சேர்க்கவும்; தேவைப்பட்டால் கூடுதல் வெண்ணெயையும் சேர்த்துக்கொள்ளலாம்.

- அவ்வளவுதான் சூப்பரான சைனீஸ் ஸ்டைல் முட்டை வறுவல் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Sunday, September 27, 2026, 13:58 [IST]
Desktop Bottom Promotion