Latest Updates
-
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
Solar Eclipse 2026: சூரிய கிரகணம் என்பது வணியல்ரீதியாகவும், ஜோதிடரீதியாகவும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். இந்த ஆண்டின் மிக முக்கியமான வானியல் நிகழ்வு 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12, புதன்கிழமையன்று நடைபெறவுள்ளது. இது ஒரு இயற்கையான நிகழ்வாகும். ஜோதிட ரீதியாக, சூரியன் நிழல் கிரகமான ராகுவின் தாக்கத்திற்கு உள்ளாவதால், இது ஒரு சுபமான தருணமாகக் கருதப்படுவதில்லை.

சூரியன்தான் பூமியின் ஒளி மற்றும் ஆற்றலின் முதன்மை ஆதாரமாகும். சூரியனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முக்கியமான ஜோதிடரீதியாக கருதப்படும் இந்த நிகழ்வு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இருப்பினும், இந்த நிகழ்வால் எதிர்மறையாக பாதிக்கப்படக்கூடிய இரண்டு முக்கிய ராசிகள் உள்ளன. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
இந்த சூரிய கிரகணம் கடக ராசியில் நிகழப்போகிறது. தற்போது சூரியன் கடக ராசியில் சஞ்சரித்து வருகிறது. எனவே இந்த ராசிக்கு சூரிய கிரகணம் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் அவர்கள் மனநிலை மாற்றங்கள், விரக்தி மற்றும் பதற்றம் போன்ற சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். சூரியன் ராகுவால் பாதிக்கப்படுவதாலும், கடக ராசிக்கு அதிபதியாக சந்திரன் இருப்பதாலும், இவர்களின் தொழில் வாழ்க்கையில் பெரும் பின்னடைவு ஏற்படலாம். மேலும், இந்த கிரகணம் இவர்களின் ஆற்றலைக் குறைத்து, மனவேதனையைத் தரக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கலாம்.இந்தக் காலகட்டத்தில் அமைதியாக இருப்பது நல்லது, எதைப்பற்றியும் அதிகம் சிந்திக்காமல் மன அமைதிக்கும், நிம்மதிக்கும் முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். சூரிய கிரகணத்தின் போது சூரியன் ராகு கிரகத்தின் தாக்கத்திற்கு உள்ளாவதால், இந்த சூழலில் சிம்ம ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் மனரீதியாக மிகவும் சோர்வாகவோ அல்லது அழுத்தமாகவோ உணரக்கூடும். இந்த காலகட்டத்தில் அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் மன உறுதி குறைய வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் அவர்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றாலும், ஏதோ கெட்டது நடக்கப்போகிறது என்ற மாயை அல்லது எண்ணம் இவர்களின் மனதில் தோன்றலாம். எனவே நேர்மறையான எண்ணங்களுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவர்கள் தங்கள் மனதைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும், மேலும், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் எதிர்மறை உணர்வுகளைத் தவிர்க்க, கிரகணத்திற்கு முன்னதாகவே போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த நேரத்தில் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும், அதுதான் உங்கள் மன அமைதிக்கு நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்திற்கு பிறகான காலம் அவ்வளவு சுலபமானதாக இருக்கப்போவதில்லை. அவர்களால் சமாளிக்க முடியாத அளவிற்கு நிதி சிக்கல்கள் ஏற்படலாம். பல உணர்ச்சி மாற்றங்கள் உங்களுக்கு அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும். தேவையற்ற விஷயங்களுக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.
உங்களின் கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்றால், அது குடும்பத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். நிதி நெருக்கடிகள் அதிகரிப்பதால், அது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதில் தலையிட வேண்டாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

