Latest Updates
-
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம்
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
Mughlai Veg Biryani Recipe in Tamil: புரட்ட்டசி வந்துவிட்டது என்பதற்காக பிரியாணியை நம்மால் மறந்து விட முடியாது. இந்த மாதத்தில் குறைந்தபட்சம் வெஜ் பிரியாணியாவது சாப்பிட வேண்டும். ஆனால் எவ்வளவு நாட்கள்தான் ஒரே மாதிரியான வெஜ் பிரியாணியை செய்வது, கொஞ்சம் வித்தியாசமான வெஜ் பிரியாணியை சமைக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்த முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணியை செஞ்சு பாருங்க.

இந்த முகலாய பிரியாணி நீங்கள் வழக்கமாக சாப்பிடும் வெஜ் பிரியாணி போல அல்லாமல் வித்தியாசமான சுவையில் மிகவும் அருமையாக இருக்கும். புரட்டாசி மாதத்தில் சிக்கன், மட்டனை ரொம்ப மிஸ் செய்பவர்கள் இந்த பிரியாணியை முயற்சி செய்து பார்க்கலாம்.
உங்களுக்கு இந்த சுவையான முகலாய வெஜ் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முகலாய வெஜ் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 3 கப் பாஸ்மதி அரிசி (சமைத்தது)
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 10 முந்திரிப் பருப்புகள்
- 2 பிரிஞ்சி இலை
- 3 கிராம்பு
- 1 ஏலக்காய்
- 1/2 அங்குல துண்டு பட்டை
- 1/2 ஸ்பூன் சோம்பு
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1/2ஸ்பூன் மல்லித் தூள்
- 1/2 ஸ்பூன் வெந்தயம்
- 2 காய்ந்த மிளகாய்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான் அளவு உப்பு
- 1 ஸ்பூன் சர்க்கரை
- 2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- நறுக்கிய காய்கறிகள் (1/2 கப் குடைமிளகாய், 1/2 கப் கேரட், 1/2 கப்
பட்டாணி மற்றும் 1/2 கப் பீன்ஸ்)
- 1 கப் கொத்தமல்லி இலை
- 1 கப் நறுக்கிய தக்காளி
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை:
- பாசுமதி அரிசியை முதலில் சமைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பெரிய வாணலியில், மிதமான சூட்டில் எண்ணெயை சூடாக்கி, அதில் சீரகம், வெந்தயம், பெருஞ்சீரகம், கொத்தமல்லி, பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயை சேர்த்து வதக்கவும்.
- அவற்றை மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அவ்வப்போது கிளறிவிட்டு வெங்காயத்தை வதக்கவும்.
- அதன்பின் வர மிளகாய், முந்திரிப் பருப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம்-முந்திரி கலவையை ஆறவைத்து, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சற்று கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள இந்தக் கலவையைச் சேர்க்கவும். மிதமான தீயில் இந்தக் கலவையை சில நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய காய்கறிகள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து, மூடி வைத்து, அவ்வப்போது கிளறிக்கொண்டே மிதமான தீயில் சமைக்கவும்.
- காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கவும்.
- ஒரு குக்கரில் நெய் தடவி, அரை அங்குல தடிமனுக்கு அரிசியை பரப்பவும்.
- அரிசி முழுவதையும் மூடும் வகையில், காய்கறிக் கலவையை அதன் மேல் செட் செய்து அரை அங்குல தடிமனுக்கு மூடவும்.
- காய்கறிக் கலவை மீதமிருந்தால், மற்றொரு அரிசி அடுக்கு மற்றும் காய்கறி அடுக்கை உருவாக்கலாம்.
- பின்னர் மேலே நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து அதில் குக்கரை வைத்து 20 நிமிடம் தம் போடவும்.
- தம்மில் இருந்து குக்கரை இறக்கி கிளறினால் சுவையான முகலாய வெஜ் பிரியாணி ரெசிபி!



Click it and Unblock the Notifications
