ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Rottu Kadai Thakkali Kulambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் டிபனாக இட்லி தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு சைடு டிஷ்ஷை முடிவெடுத்துவிட்டீர்களா? இன்னும் இல்லை என்றால், ஒருமுறை ரோட்டுக்கடை தக்காளி குழம்பை செய்யுங்கள். இந்த குழம்பு இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். இந்த குழம்பை நீரைப் போன்று செய்தால், வீட்டில் உள்ளோர் கணக்கில்லாமல் இட்லியை சாப்பிடுவார்கள்.

Thakkali Kuzhambu How To Make Rottu Kadai Thakkali Kulambu Recipe

உங்களுக்கு இந்த ரோட்டுக்கடை தக்காளி குழம்பு ரெசிபியை எப்படி செய்வதெந்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை தக்காளி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொக்குட.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு..

* தக்காளி - 4
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* அரைத்த தக்காளி
* தண்ணீர் - தேவையான அளவு
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இட்லி மாவு - 1 கரண்டி (நீரில் கரைத்துக் கொள்ளவும்)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் 4 தக்காளியை அப்படியே சேர்த்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, தக்காளியை வெளியே எடுத்து, அதை குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, அத்துடன் மல்லித் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, பச்சை வாசனை போக 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்ததும், அதில் இட்லி மாவை நீரில் கரைத்து ஊற்றி கிளறி விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து, 3 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான ரோட்டுக்கடை தக்காளி குழம்பு தயார்.

Image Courtesy: youtube@RECIPESINMYWAY

[ of 5 - Users]
Story first published: Monday, September 28, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion