Latest Updates
-
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனித்துவமான ஆளுமையைக் கொண்டவர்கள். சிலர் மற்றவர்களை டாமினேட் செய்து ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். ஜோதிடத்தின்படி, ஆதிக்கம் செலுத்தும் தன்மை என்பது மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதையோ அல்லது கண்ணியக்குறைவாக நடந்துகொள்வதையோ குறிப்பதல்ல. மாறாக, அது இயல்பான ஆளுமைத் திறன், மன உறுதி மற்றும் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் ஆகியவற்றைக் குறிக்கிறது.

இவர்கள் இயல்பான தலைவர்களாகக் கருதப்படுகிறார்கள், ஏனெனில் இவர்களிடம் தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் வலிமை மிக்கவர்களாகவும், முன்முயற்சி எடுப்பவர்களாகவும், தனித்துத் தெரிபவர்களாகவும் திகழ்வார்கள். ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்கள் தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் வலுவான ஆளுமை ஆகியவற்றால் மற்றவர்களை விட தனித்து நிற்கிறார்கள், குறிப்பாக இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் மகாராணி போல அனைவரையும் ஆட்சி செய்வார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த இடத்துக்கு சென்றாலும் மற்றவர்களை ஆள்பவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
நெருப்பு ராசியான மேஷ ராசி பெண்கள் வலிமையையும் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களிடம் இயல்பிலேயே தலைமைத்துவ குணம் இருப்பதால், எப்போதும் முன்முயற்சி எடுத்து எல்லைகளைத் தாண்டிச் செல்வார்கள். அவர்களின் போட்டி மனப்பான்மை அவர்களை வாழ்க்கையில் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறது, மேலும் அவர்களின் ஆக்ரோஷமும் உறுதியும் அவர்களைக் மற்றவர்களை விட கடினமான ஆளுமை கொண்டவர்களாக மாற்றுகின்றன. அவர்கள் சில சமயங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும், அடக்குமுறை செய்பவர்களாகவும் இருந்தாலும், மேஷ ராசிக்காரர்கள் பேரார்வம் மிக்கவர்கள், துடிப்பானவர்கள் மற்றும் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பவர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையையும் வசீகரத்தையும் வெளிப்படுத்தும் நெருப்பு ராசியாவர். அவர்களின் இருப்பே மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது, மேலும் அவர்கள் இயல்பாகவே திறமையான, உற்சாகமான மற்றும் கற்பனைத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் அன்பானவர்களாகவும், கொடுக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருந்தாலும், அவர்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும், அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டவர்களாகவும் இருக்க முடியும். தங்களின் மன வலிமை மற்றும் புதுப்பித்துக் கொள்ளும் திறன் காரணமாக அவர்கள் திறமையான தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கும் அதே நேரத்தில் வசீகரமானவர்கள் என்பதையும் மறுக்க முடியாது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மன வலிமையும், பழிவாங்கும் குணமும் கொண்ட நீர் ராசிகளாவர், அவர்கள் தங்கள் தீவிர உணர்வுகளுக்கும், பேரார்வத்திற்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் ஆழமான சிந்தனையாளர்கள், தேவைப்படும்போது பழிவாங்கும் மற்றும் தந்திரமானவர்களாக மாறும் திறன் கொண்டவர்கள். விருச்சிக ராசி பெண்களுக்கு கூர்மையான உள்ளுணர்வு உள்ளது, அது அவர்களை பேரார்வம் மிக்கவர்களாகவும், அதே சமயம் தனிமையை விரும்புபவர்களாகவும் மாற்றுகிறது. அவர்களின் உந்துதல் அவர்களை மற்றவர்கள் அவர்களை பார்த்து அஞ்சத்தக்க சக்திகளாக ஆக்குகிறது, சிலசமயங்களில் அவர்களின் இருப்பே மற்றவர்களுக்கு அச்சறுத்தலை ஏற்படுத்தலாம்.
மகரம்
கர்மா மற்றும் ஒழுக்கத்தின் கிரகமான சனிபகவானால் ஆளப்படும் மகர ராசிக்காரர்கள், தங்கள் வலுவான பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்கத்திற்காக அறியப்படுகிறார்கள். அவர்களுக்கு வலுவான பொறுப்புணர்வும், ஆர்வமும் உண்டு, மேலும் அவர்கள் லட்சிய வெறி கொண்டவர்கள், விடாமுயற்சி கொண்டவர்கள் மற்றும் பூமி போல பொறுமைக் கொண்டவர்கள். அவர்களின் தீவிரத்தன்மை மற்றும் தீவிர கவனம் காரணமாக, மகர ராசிக்காரர்கள் பணியிடத்தில் பயமுறுத்துபவர்களாகவும், உயர் பொறுப்பில் இருப்பவர்களாகவும் விளங்குவார்கள். அவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களும் தங்களைப் போல வலுவான பொறுப்புணர்வும், ஒழுக்கமும் கொண்டவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அது நிறைவேறாத பட்சத்தில் அவர்கள் சைக்கோக்களாக மாறுவார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

