Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்!
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் 2026 அக்டோபர் 03 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இருப்பினும் இந்த வாரத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். கடனாக பணம் வாங்கியிருந்தால், அதை சரியான நேரத்தில் முழுமையாக திருப்பி கொடுத்துவிடுங்கள். யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். தொழில் மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். உங்களின் ரகசியங்கள் அல்லது திட்டங்கள் கசியும் வாய்ப்புள்ளதால், மற்றவர்களிடம் பகிரும் போது எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்களையும், கருத்து வேறுபாடுகளையும் தவிர்க்க வேண்டும். உங்களின் முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இந்த வாரத்தில் உங்களின் முன்னேற்ற பாதை திறக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். நேர்மறையாக இருந்து, கடினமாக உழைத்தால், நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். ஒவ்வொரு இடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி மற்றும் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். இருந்தாலும், ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணியிடத்தில் வேலை செய்வதற்கான ஒரு உந்துதலைப் பெறுவீர்கள். பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். முதலீடுகளை செய்யும் எண்ணம் இருந்தால், இந்த வாரம் உகந்ததாக இருக்கும். மொத்தத்தில் தொழில் ரீதியாக இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் வெற்றியும், முன்னேற்றத்தையும் தரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், அது நிறைவேறும். முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கலாம். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். உறவுகளைப் பொறுத்தவரை மோசமாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள் மற்றும் சிலருக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வேலையாக இருந்தாலும், வியாபாரமாக இருந்தாலும் அல்லது எந்த வேலையாக இருந்தாலும், உங்கள் முழு கவனத்தையும் அதில் செலுத்த வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கலாம். எனவே செலவுகளை கவனித்து குறைக்க வேண்டும். தொழில் ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் நன்றாக இருக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. நிதி ரீதியாக இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். வசதிகள் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். ஆனால் நிதி நிலைமை நன்றாக இருக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். தொழில் மற்றும் வேலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நிதி மற்றும் முதலீடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு வெற்றிகள் குவியும். சொத்துக்களால் ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வருமானத்தில் உயர்வு ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் மோசமடையக்கூடும். எதையும் செய்யும் முன் குடும்பத்தினருடன் கலந்தாலோசியுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் பதற்றம் நிறைந்ததாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் நிதி ரீதியாக வார தொடக்கம் நன்றாக இருக்கும். கணிசமான லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். வியாபாரம் திடீரென்று சிறப்பாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
