4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..

Posted By:

Egg Masala For Chapati In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்திக்கு அடிக்கடி முட்டை சைடு டிஷ் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் தான் முட்டையை சைடு டிஷ்ஷாக செய்து சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் முட்டையை சைடு டிஷ்ஷாக செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த பக்குவத்தில் தனியாக ஒரு மசாலாவை அரைத்து முட்டை மசாலா செய்யுங்கள். இப்படி செய்யும் போது வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவீர்கள். அந்த அளவில் இந்த மசாலாவின் சுவை பிரமாதமாக இருக்கும்.

Egg Masala How To Make Egg Masala For Chapati

உங்களுக்கு இந்த முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* இஞ்சி - 1 துண்டு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* அரைத்த மசாலா
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* வேக வைத்த முட்டை - 4 (துண்டுகளாக்கப்பட்டது)
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் நறுக்கிய தேங்காய், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, மிளகு, சோம்பு, சீரகம், கசகசா ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, 4-5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்து நறுக்கி வைத்துள்ள முட்டையை சேர்த்து கிளறி, 5 நிமிடம் வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான முட்டை மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, September 26, 2026, 19:40 [IST]
Desktop Bottom Promotion