கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..

Posted By:

Restaurant Style Carrot Pepper Fry Recipe In Tamil: நீங்கள் கேரட்டை இதுவரை பொரியல், குருமா, சாம்பார் என்று செய்து சாப்பிட்டிருப்பீர்கள். அதுவே ஸ்வீட் என்றால் கேரட் அல்வா செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் இந்த கேரட்டை சற்று வித்தியாசமான சுவைத்து செய்து சுவைக்க நினைத்தால், கேரட் பெப்பர் ப்ரை செய்யுங்கள். அதுவும் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் கேரட் பெப்பர் ப்ரை செய்யும் போது, கேரட் பிடிக்காதவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

Restaurant Style Carrot Pepper Fry How To Make Carrot Pepper Fry Recipe

உங்களுக்கு இந்த ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கேரட் பெப்பர் ப்ரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கேரட் பெப்பர் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ப்ரை செய்வதற்கு...

* கேரட் - 250 கிராம்
* சோள மாவு - 1/2 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* ஃபுட் கலர் - 2 சிட்டிகை
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

கேரட் பெப்பர் ப்ரை செய்வதற்கு..

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 4-5 பல் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
* சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* பொடித்த முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
* ப்ரை செய்த கேரட்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, வட்டத் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் சோள மாவு, அரிசி மாவு, உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, ஃபுட் கலர், சிறிது நீரை ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கேரட்டை மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக ப்ரை செய்து, தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் 1/2 கப் நீரை ஊற்றி, உப்பு, சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் மிளகுத் தூள், பொடித்த முந்திரியை சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் ப்ரை செய்த கேரட்டை சேர்த்து, மசாலா கேரட்டில் ஒன்று சேருமாறு ஒரு 2 நிமிடம் நன்கு கிளறி விட்டு, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கேரட் பெப்பர் ப்ரை தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, September 26, 2026, 16:12 [IST]
Desktop Bottom Promotion