Latest Updates
-
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா?
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்!
Numerology Birth Dates Rich After 40 In Tamil: நம் ஒவ்வொருவருக்குமே பிரச்சனை இல்லாத, நிம்மதியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காகவே அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதற்கேற்ற பலன் அனைவருக்குமே கிடைத்துவிடுவதில்லை.
சிலர் எவ்வித முயற்சிகளையும் எடுக்காமலேயே வாழ்வில் உயரத்தை அடைவார்கள். இன்னும் சிலர் குறிப்பிட்ட வயதை அடைந்த பின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் காண்பார்கள். எண் கணிதம் மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின்படி, ஒருவரின் பிறந்த தேதி அவர்களின் தனிப்பட்ட குணங்கள், முடிவெடுக்கும் திறன் மற்றும் வாழ்க்கைப் பாதையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதுவும் சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் ஆரம்ப காலங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும், வயது அதிகரிக்கும் போது அனுபவம் மற்றும் தன்னம்பிக்கையைப் பயன்படுத்தி முன்னேறுவார்கள் என்று எண் கணிதம் கூறுகிறது. குறிப்பாக 40 வயதுக்குப் பிறகு தொழில் வளர்ச்சி, பணவரவு, புதிய வாய்ப்புகள் மற்றும் சமூகத்தில் மதிப்பு போன்றவை அதிகரிக்கக்கூடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனால், குறிப்பிட்ட பிறந்த தேதிகளில் பிறந்தவர்களின் எதிர்காலம் குறித்த ஆர்வம் பலரிடமும் காணப்படுகிறது.
எனினும், பிறந்த தேதி மட்டுமே ஒருவரின் செல்வம் அல்லது வெற்றியை நிர்ணயிக்கிறது என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை. ஒருவரின் உழைப்பு, திறமை, வாய்ப்புகளைப் பயன்படுத்தும் விதம் மற்றும் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்போது எண் கணித நம்பிக்கைகளின் அடிப்படையில், எந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு 40 வயதுக்குப் பிறகு செல்வம் மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று என்பது குறித்து காண்போம்.
மூல எண்
எண் கணிதத்தில் 1-9 வரையிலான மூல எண்கள் உள்ளன. இந்த எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகங்களால் ஆளப்படுகின்றன. அந்த கிரகங்களின் குணங்களைப் பொறுத்து தான், அந்நபரின் எதிர்காலம், குணங்கள், வாழ்க்கை, அதிர்ஷ்டம் போன்றவை இருக்கும். இப்படிப்பட்ட மூல எண் ஒருவரது பிறந்த தேதியின் கூட்டுத் தொகையின் ஒற்றை இலக்க எண்ணில் இருந்து பெறப்படுகிறது. உதாரணமாக, ஒருவர் ஒரு மாதத்தின் 25 ஆம் தேதி பிறந்திருந்தால், அந்நபரின் மூல எண் 2+5=7 ஆகும். அதாவது, இந்நபரின் மூல எண் 7 ஆகும்.
எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. எண் கணிதத்தின் படி, எண் 1 சூரியனுடன் தொடர்புடையது. இந்த சூரியன் தலைமைத்துவம், கௌரவம், நம்பிக்கை, அதிகாரம் ஆகியவற்றின் காரணியாவார். எனவே இந்த எண்ணிற்குரியவர்கள் அரசு துறை, நிர்வாகம், தலைமை பொறுப்புகளில் சிறந்து விளங்குவார்கள். இருப்பினும் சில சமயங்களில் இவர்கள் விரும்பிய வெற்றியைப் பெற காலம் ஆகலாம். இருந்தாலும், 40 வயதிற்கு பின், இவர்களுக்கு ஒரு பெரிய பொறுப்புக அல்லது பதவி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அதுவும் இவர்கள் அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளில் இருந்து 40 வயதிற்கு மேல் கொடிகட்டி பறப்பார்கள்.
எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. எண் கணிதத்தின் படி, எண் 5-இன் அதிபதி புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். எனவே இந்த எண்ணிற்கு உரியவர்கள் வணிகத்தில் சிறந்தவராகவும், நல்ல புத்திசாலியாகவும், பேச்சாற்றல் கொண்டவராகவும், படிப்பில் கெட்டிக்காரராகவும் இருப்பார்கள். இருப்பினும் இந்த எண்ணிற்குரியவர்கள் சிறிய அளவிலான வணிகத்தை வளர்ப்பதில் வல்லவராக இருக்கலாம். ஆனால் இந்த வணிகத்தை பெரிய அளவில் கொண்டு செல்லும் திறனும், அதற்கான வாய்ப்புக்களும் 40 வயதிற்கு மேல் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்தினால், நினைத்து பார்க்க முடியாத உயரத்தை அடைவார்கள்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. எண் கணிதத்தின் படி, எண் 6-ன் அதிபதி சுக்கிரன் ஆவார். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த எண்ணிற்குரியவர்கள் நிதி முன்னேற்றம் மற்றும் வசதியான வாழ்க்கை முறையால் ஈர்க்கப்படுவார்கள். மேலும் இவர்கள் ஊடகம், ஃபேஷன், கலை, கவர்ச்சி, அழகு தொடர்பான துறைகளில் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. முக்கியமாக இவர்கள் 35 முதல் 40 வயதிற்கு பின் நிதி நிலையில் ஒரு நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
