Latest Updates
-
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க..
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்!
Aadi Amavasai 2026: என்ன தான் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், ஆடி மாத அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுவும் இந்நாள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க உகந்த நாளாகும். ஏனெனில் இந்த நாளில் தான் மறைந்த முன்னோர்கள் நம்மை ஆசீர்வதிக்க பூமிக்கு வருகை தருவதாக கூறப்படுகிறது. இந்த அமாவாசை நாளில் அதிகாலையில் நீர்நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுத்தால், முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைந்து, முன்னோர்களின் ஆசியால் குடும்பத்தில் சந்தோஷம் பெருகும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டின் ஆடி அமாவாசை ஆகஸ்ட் 12 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் தர்ப்பணம், திதி கொடுப்பது மட்டுமின்றி, தானம் செய்வதும் மிகவும் சிறப்பானதாக, நன்மைகளைத் தரக்கூடியதாக கூறப்படுகிறது. இந்த அமாவாசை நாளில் சூரியனும், சந்திரனும் கடக ராசியில் இணைவதால், முன்னோர்களை நினைத்து செய்யும் வழிபாடுகளின் பலன் முழுமையாக கிடைக்கும். அதுவும் ராசிக்கேற்ப ஒருவர் தானம் செய்வது மிகவும் சிறப்பு. இப்போது ஆடி அமாவாசை அன்று எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்தப் பொருட்களை தானம் செய்வது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது என்பதைக் காண்போம்.
மேஷம் - செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்கள் சிவப்பு நிற ஆடைகள், பருப்பு வகைகள், செம்பு பாத்திரங்களை தானம் செய்வது மிகவும் நல்லது.
ரிஷபம் - சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் பால், அரிசி, சர்க்கரை மற்றும் வெள்ளை நிற ஆடைகளை தானம் செய்வது நல்லதாக கருதப்படுகிறது.
மிதுனம் - புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசிக்காரர்கள் பச்சை பயறு, பச்சை நிற ஆடைகள் அல்லது பச்சை காய்கறிகளை தானம் செய்வது நல்லது.
கடகம் - சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசியைச் சேர்ந்தவர்கள் பால், அரிசி, வெள்ளி அல்லது வெள்ளை நிற இனிப்புக்களை தானம் செய்வது சிறப்பு.
சிம்மம் - சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் கோதுமை, வெல்லம், செம்பு பாத்திரங்கள் அல்லது சிறப்பு நிற பழங்களை தானம் செய்வது நன்மை பயக்கும்.
கன்னி - புதனை அதிபதியாக கொண்ட கன்னி ராசிக்காரர்கள் பசுமையான செடிகள், பாசி பயறு, படிப்பு சம்பந்தமான பொருட்களை தானமாக வழங்குவது மிகவும் நல்லது.
துலாம் - சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் வெள்ளை நிற ஆடைகள், அரிசி, சர்க்கரை, வாசனை பொருட்கள் போன்றவற்றை தானம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
விருச்சிகம் - செவ்வாயை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் பருப்பு, வெல்லம், சிவப்பு நிற ஆடைகளை தானம் செய்வது சிறந்தது.
தனுசு - குரு பகவானை அதிபதியாக கொண்ட தனுசு ராசிக்காரர்கள் மஞ்சள் நிற தானியங்கள், மஞ்சள் நிற ஆடைகள் அல்லது பிற மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்வது நல்லது. அதுமட்டுமின்றி, ஏழை மாணவர்களுக்கு புத்தகங்களை வாங்கி கொடுப்பதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
மகரம் - சனி பகவானை அதிபதியாக கொண்ட மகர ராசிக்காரர்கள் கருப்பு எள்ளு, கடுகு எண்ணெய் போன்றவற்றை தானம் செய்வது நல்லது. அதுமட்டுமின்றி, ஏழை எளியோருக்கு காலணிகள் அல்லது போர்வைகளை தானம் செய்யலாம்.
கும்பம் - கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவான் என்பதால் இந்த ராசிக்காரர்கள் கருப்பு எள்ளு, கருப்பு நிற ஆடைகள், குடை, இரும்பு பொருட்களை தானம் செய்யலாம்.
மீனம் - குரு பகவானை அதிபதியாக கொண்ட மீன ராசிக்காரர்கள் கொண்டைக்கடலை, மஞ்சள் நிற இனிப்புகள், கடலை மாவு லட்டு போன்றவற்றை தானம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications