Latest Updates
-
50 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருந்த இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார அரசர் யார் தெரியுமா? -
வக்கிர சனியால் டிசம்பர் 11 வரை இந்த 5 ராசிக்கு மிகவும் ஆபத்தான காலகட்டம்.. உஷார்.. -
கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 10, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்டசெலவுகள் தேடிவரப் போகுதாம் - பர்ஸ் பத்திரம் -
நவம்பர் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் இந்த 3 ராசிகளை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு இந்த வெஜிடேபிள் வெள்ளை குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க! -
சத்தான உளுந்தோரை ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க - எலும்பு இரும்பு மாதிரி இருக்கும் -
Kandha Sashti Viradham 2026: கந்த சஷ்டி விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை! -
Hair Care: முடி நரைப்பதை தாமதப்படுத்தணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க..
Aadi Amavasai 2026: என்ன தான் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், ஆடி மாத அமாவாசை சிறப்பு வாய்ந்தது. அதுவும் இந்த மாதத்தில் வரும் அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், பித்ரு காரியம் செய்ய, திதி கொடுக்க உகந்த நாளாகும். சொல்லப்போனால் எந்த அமாவாசையிலும் பித்ருக்களுக்கு எந்த ஒரு திதி கொடுக்காவிட்டாலும், இந்த அமாவாசையில் காரியம் செய்வதால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை.

அந்த வகையில் இந்த ஆண்டின் ஆடி அமாவாசை ஆகஸ்ட் 12 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் எந்த மாதிரியான விஷயங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் எதை செய்யக்கூடாது என்பது நிச்சயம் பலருக்கு தெரிந்திருக்காது. உங்களுக்கும் தெரியாதா? அப்படியானால் உங்களுக்காக ஆடி அமாவாசை நாளில் செய்யக்கூடாதவைகள் குறித்து கீழே கொடுத்துள்ளோம். அதை படித்து தெரிந்து, அந்த விஷயங்களை ஒருபோதும் செய்யாதீர்கள்.
1. தர்ப்பணத்திற்கு முன் கோலம் கூடாது
ஆடி அமாவாசை நாளானது இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய தர்ப்பணம் செய்யும் நாளாகும். இந்நாளில் தர்ப்பணம் செய்வதற்கு முன் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. எனவே ஆடி அமாவாசை நாளில் வீட்டில் திதி அல்லது தர்ப்பணம் செய்யும் வரை கோலம் போடாதீர்கள்.
2. சுப காரியங்களைத் தவிர்க்கவும்
அமாவாசை நாளானது முன்னோர்களுக்கு வழிபாடு செய்ய உகந்த நாள் என்பதால், இந்நாளில் சுப காரியங்களான திருமண பேச்சு வார்த்தை, புதுமனை புகுவிழா நடத்துவது, புதிய தொழிலை தொடங்குவது, வீடு, வாகனம் வாங்குவது போன்ற சுப காரியங்களை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது ஒரு பாரம்பரிய நடைமுறை.
3. அசைவ உணவுகள் கூடாது
ஆடி அமாவாசை நாளில் வீட்டில் அசைவ உணவுகளை சமைப்பது அல்லது அசைவ உணவை வெளியில் வாங்கி உண்பது போன்றவற்றை தவிர்ப்பது வழக்கம். அதேப் போல் சைவ உணவை உண்பவர்கள் வெங்காயம், பூண்டு, காலிஃப்ளவர், முருங்கை, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகள் தாமச குணம் கொண்டதாக கருதப்படுகிறது. எனவே எளிமையான உணவுகளை சமைத்து சாப்பிடுங்கள்.
4. ஷேவிங் மற்றும் முடி வெட்டுவது கூடாது
ஆடி அமாவாசை நாளில் ஷேவிங் செய்வது, முடி வெட்டுவது, ட்ரிம் செய்வது, நகம் வெட்டுவது போன்றவற்றை செய்யாமல் இருப்பது நல்லது. சில வீடுகளில் தாய் தந்தை உள்ளவர்கள் அமாவாசை நாளில் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பதைத் தவிர்ப்பார்கள்.
5. உணவை வீணாக்கக்கூடாது
ஆடி அமாவாசை நாளில் முன்னோர்கள் ஏதாவது ஒரு வடிவில் நம்மை சுற்றி வருவார்கள் என்பது நம்பிக்கை. இப்படிப்பட்ட நாளில் காகத்திற்கு உணவளிப்பது, ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்வது போன்ற நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். அதை விடுத்து அமாவாசை நாளன்று வீட்டில் சமைத்த உணவை வீணாக்காமல் அளவாக சமைத்து சாப்பிடுங்கள். ஒருவேளை சாதம் மீந்து போனால், பசியுடன் இருப்பவர்களுக்கு அதை கொடுங்கள்.
6. சூரிய அஸ்தமனத்திற்கு பின் வீட்டை பெருக்கக்கூடாது
பொதுவாக மாலை வேளையில் வீட்டை பெருக்குவது, குப்பையை வெளியே கொட்டுவது, துணிகளை துவைப்பது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். அதுவும் அமாவாசை நாளில் இந்த செயல்களை அறவே தவிர்க்க வேண்டும்.
7. தர்ப்பணத்திற்கு முன் உணவருந்தக்கூடாது
வீட்டில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அல்லது திதி கொடுப்பீர்களானால், அதை காலையில் உணவருந்தும் முன் செய்ய வேண்டும். இந்த காரியங்களை செய்த பின்னர் தான் உணவருந்த வேண்டும். ஒருவேளை ஆரோக்கிய பிரச்சனைகளை கொண்டவர்கள் தங்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ப இவற்றைக் கடைப்பிடிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
