Latest Updates
-
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஐயங்கார் ஸ்டைல் அரைச்சுவிட்ட பூசணிக்காய் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
சொரியாசிஸ் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர்! -
உலகம் முழுவதும் டாக்டர்கள் வெள்ளை நிற கோட் அணிவதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Aadi Amavasai 2026: இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 12 ஆம் தேதி வருகிறது. இந்த அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, மதிய வேளையில் வடை, பாயாசத்துடன் சமைத்து தலவாழை இலையில் படையல் போட்டு, முன்னோரை வழிபடுவார்கள். குறிப்பாக அமாவாசை நாளில் மஞ்சள் பூசணி, வாழைக்காய் போன்றவற்றை சமைப்பார்கள். நீங்கள் இந்த ஆடி அமாவாசைக்கு வெங்காயம், பூண்ட சேர்க்காமல் நல்ல சுவையான தலவாழை சாப்பாடு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்காக சூப்பரான ஆடி அமாவாசை விரத சமையல் மெனு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மெனுவில் சாம்பார், கூட்டு, பொரியல், வறுவல், பாயாசம் என்று அனைத்தும் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் செய்முறையை அறிந்து முயற்சித்து பார்த்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
1. வெண்டைக்காய் சாம்பார்
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 3/4 கப்
* தண்ணீர் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 10
* வரமிளகாய் - 3
* வெண்டைக்காய் - 100 கிராம்
* பச்சை மிளகாய் - 2
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* புளிச்சாறு - சிறிது
* வேக வைத்த பருப்பு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் 1 கப் துவரம் பருப்பை கழுவி எடுத்துக் கொண்டு,
அதில் 2 கப் நீரை ஊற்றி, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து
குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், வரமிளகாய் ஆகியவற்றை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெண்டைக்காய், பச்சை மிளகாயை இரண்டு
துண்டுகளாக்கி சேர்த்து நன்கு 3-4 நிமிடம் தொடர்ந்து கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
மற்றுஙம் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் சாம்பார் தூளை சேர்த்து ஒருமுறை
கிளறி, 2 கப் நீரை ஊற்றி கலந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* சாம்பார் நன்கு கொதித்து, வெண்டைக்காய் வெந்ததும், அதில் சிறிது
புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் வேக வைத்த பருப்பில் முக்கால்வாசியை சேர்த்து
கலந்து, தேவைப்பட்டால் நீரை ஊற்றி கலந்து, நன்கு 5 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வெண்டைக்காய்
சாம்பார் தயார்.
2. புடலங்காய் கூட்டு
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பாசிப்பருப்பு - 3/4 கப்
* கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன தக்காளி - 1 (நறுக்கியது)
* புடலங்காய் - 150 கிராம் (தோல் நீக்கி நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 கப்
* வேக வைத்த பருப்பு
தேங்காய் விழுதிற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
செய்முறை:
* முதலில் குக்கரில் பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பு
ஆகியவற்றை நீரில் கழுவி எடுத்துக் கொண்டு, அதில் 2 கப் நீரை ஊற்றி,
மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க
வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் புடலங்காயை சேர்த்து, அத்துடன் பெருங்காயத் தூள்,
மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து
வதக்கி வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, புடலங்காயை வேக
வைக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி, மூடி வைத்து வேக
வைக்க வேண்டும். அதற்குள் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சீரகம்
மற்றும் வரமிளகாயை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* புடலங்காய் வெந்த பின் அதில் அரைத்த தேங்காயை சேர்த்து கிளறி, 3
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான புடலங்காய் கூட்டு
தயார்.
3. பூசணிக்காய் பொரியல்
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* மஞ்ச பூசணிக்காய் - 150 கிராம் (தோல் நீக்கி
துண்டுகளாக்கப்பட்டது)
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 கப்
* பொடித்த வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூசணிக்காய், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை
சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி,
1/4-1/2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து பூசணிக்காயை வேக வைக்க
வேண்டும்.
* பூசணிக்காய் வெந்ததும், மூடியைத் திறந்து, அதில் பொடித்த வெல்லம்
மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி, நீர் வற்றியதும்
இறக்கினால், சுவையான பூசணிக்காய் பொரியல் தயார்.
4. வாழைக்காய் வறுவல்
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வாழைக்காய் - 3 (தோல் நீக்கி வட்ட துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வாழைக்காயை
சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கிளறி மூடி வைத்து 8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், வரமிளகாய்,
பெருங்காயத் தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மசாலாவை வாழைக்காயுடன் சேர்த்து நன்கு கிளறி, மசாலா
பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கினால், சுவையான வாழைக்காய் வறுவல்
தயார்.
5. பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம்
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு..
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 2 கப்
தாளிப்பதற்கு..
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - சிறிது
* உலர் திராட்சை - சிறிது
* நைலான் ஜவ்வரிசி - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 லிட்டர்
* வேக வைத்த பருப்பு
* பொடித்த வெல்லாம் - 3/4 கப்
* முந்திரி, திராட்சை
* கெட்டி தேங்காய் பால் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் குக்கரில் பாசிப்பருப்பை நீரில் நன்கு 2-3 முறை கழுவி
எடுத்துக் கொண்டு, பின் 2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில்
வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரை
திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும்,
முந்திரி, உலர் திராட்சை சேர்த்து ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே நெய்யில் நைலான் ஜவ்வரிசியை சேர்த்து பொரிய விட
வேண்டும்.
* பிறகு அதில் 1/2 லிட்டர் நீரை ஊற்றி கிளறி, நன்கு 4 நிமிடம் கொதிக்க
வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து கிளறி, ப்ரை
செய்த முந்திரி, திராட்சையை சேர்த்து கலந்து நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் கெட்டி தேங்காய் பாலை ஊற்றி கலந்து 1 நிமிடம்
கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம்
தயார்.



Click it and Unblock the Notifications