Latest Updates
-
டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை - மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா? - விளக்கும் மார்பகப் புற்றுநோய் நிபுணர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன? -
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன?
அட்சய திருதியை நாளில் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: சுக்கிரனால் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.!
Akshaya Tritiya 2026: இந்த ஆண்டின் அட்சய திருதியை வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி வருகிறது. ஜோதிட ரீதியாக இந்த அட்சய திருதியை நாளானது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்நாளில் அசுரர்களின் குருவாக கருதப்படும் மற்றும் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார்.

இப்படி சொந்த ராசியில் சுக்கிரன் நுழைவதால் மிகவும் சக்தி வாய்ந்த மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. செல்வத்தின் காரணியான சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்லும் போது, அதனால் கிடைக்கும் நன்மைகள் பலமடங்கு அதிகரிக்கும்.
முக்கியமாக நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். மேலும் உறவுகளில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து சந்தோஷம் பெருகும். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். மொத்தத்தில் வாழ்க்கையில் செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும். சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக 5 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். இப்போது சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் நல்ல உயரத்தை அடையலாம்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன் 8 ஆவது வீட்டிற்கு சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திடீர் நிதி நன்மைகள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் காலமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய சாதனைகளைப் படைப்பார்கள். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். நிதி நன்மைகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி நிலை வலுவடையும். ஆடம்பரமான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்வீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



