Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 தேங்காயும், 1 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க..
Coconut Laddu Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் உங்கள் பிள்ளைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் உங்கள் பிள்ளைகளுக்கு ஸ்வீட் என்றால் பிடிக்குமா? முக்கியமாக லட்டு விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் தேங்காயும், பாலும் இருந்தால், அவற்றைக் கொண்டு 10 நிமிடத்தில் அருமையான லட்டு செய்யுங்கள். இந்த லட்டு மிகவும் ருசியாக இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் லட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1
* காய்ச்சிய பால் - 1 கப்
* சர்க்கரை - 3/4 கப்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு தேங்காயை உடைத்து, அதை கீறி, அதன் ப்ரௌன் பகுதியை
நீக்கிவிட்டு, வெள்ளைப் பகுதியை மட்டும் பொடியாக நறுக்கி ஜாரில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை மெல்லிய துருவலாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அடி கனமான நான்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில்
துருவிய தேங்காயை சேர்த்து, நிறம் மாறாமல் ஈரப்பதம் போகும் வரை வறுக்க
வேண்டும். பின் வறுத்த தேங்காயில் இருந்து 2 ஸ்பூன் தேங்காயை ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பேனில் உள்ள தேங்காயில் காய்ச்சிய பாலை ஊற்றி நன்கு
கிளறி விட வேண்டும்.
* பாலானது சுண்டியதும், அதில் சர்க்கரையை சேர்த்து, ஏலக்காய் தூளை
தூவி நன்கு கிளறி விட வேண்டும். சர்க்கரை சேர்த்த பின், அது கரைந்து
நீர்விட்டது போன்று இருக்கும். அப்போது நன்கு தொடர்ந்து சுண்டும் வரை
கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* நீரானது நன்கு சுண்டியதும், அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி நன்கு
கிளறி விட்டு இறக்கி கை பொறுக்கும் சூட்டிற்கு வரும் வரை குளிர வைக்க
வேண்டும்.
* பின் தேங்காய் கலவையை சிறிது எடுத்து லட்டு போன்றுஉருண்டையாக
உருட்டி, உடனே தேங்காயில் பிரட்டி ஒரு தட்டில் வைக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து தேங்காய் கலவையையும் உருட்டினால், சுவையான
தேங்காய் லட்டு தயார்.



Click it and Unblock the Notifications