Latest Updates
-
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். ..
Akshaya Tritiya 2026: இந்த ஆண்டின் மிகவும் மங்களகரமான அட்சய திருதியை நாளானது ஏப்ரல் 19 ஆம் தேதி வருகிறது. 'அட்சயம்' என்றால் 'அள்ள அள்ள குறையாதது' என்று பொருள்படும். இந்த அட்சய திருதியை நாளில் தான் பரசுராமர் அவதரித்த நாள், வியாசர் மகாபாரதத்தை எழுதிய நாள், கங்கை பூமிக்கு வந்த நாள், பாண்டவர்களுக்கு அட்சய பாத்திரம் கிடைத்த நாள். இந்த அற்புதமான விஷயங்கள் எல்லாம் அட்சய திருதியை நாளில் தான் நிகழ்ந்தன.

பொதுவாக அமாவாசையில் இருந்து மூன்றாவது நாளில் திருதியை திதி வரும். திருதியை என்பது குரு பகவானுக்கு மிகவும் பிடித்த திதியாகும். அதுவும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியை திதியில் தான் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த அட்சய திருதியை நாளில் பெரும்பாலும் தங்கம், வெள்ளி போன்றவற்றை மக்கள் வாங்குவார்கள். ஆனால் இந்த பொருட்களைத் தவிர மங்களரமான பொருட்களாக கருதப்படும் உப்பு, மஞ்சள், குங்குமம், கற்கண்டு போன்றவற்றையும் வாங்கலாம்.
அதுவும் பிறந்த தேதியின் அடிப்படையில் குறிப்பிட்ட பொருட்களை அட்சய திருதியை நாளில் வாங்குவது, அளவற்ற வெற்றியையும் செழிப்பையும் கொண்டு வரக்கூடும். ஜோதிடர் சுப்ரியா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த தேதியில் பிறந்தவர்கள் எவற்றை வாங்குவது நல்லது என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "அட்சய திருதியை நாளில் எதையாவது கண்மூடித்தனமாக வாங்காமல், உண்மையான செல்வ ஆற்றலைச் செயல்படுத்த, உங்களுக்கு உரிய 'மூல எண்ணின்' (Mulank/Birth Number) அடிப்படையில் பொருட்களை வாங்குங்கள். உங்களுக்குரிய மூல எண்ணை கண்டறிய, உங்களின் பிறந்த தேதியில் இலக்கங்களை கூட்டுங்கள். உதாரணமாக, 15 ஆம் தேதி பிறந்திருந்தால், உங்களின் மூல எண் 1+5=6 ஆகும்." என்று குறிப்பிட்டிருந்தார்.
`
மூல எண் 1 (1, 10, 19, 28 ஆகிய தேதி)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சூரியனால் ஆளப்படுகிறார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கம், செம்புப் பொருட்கள், தலைமைத்துவத்திற்கு உதவும் கருவிகள் போன்றவற்றை வாங்குவது நல்லது. இதனால் அது அவர்களின் வெற்றி, அதிகாரம் மற்றும் தொழில் வளர்ச்சியைச் செயல்படுத்துகிறது.
மூல எண் 2 (2, 11, 20, 29 ஆகிய தேதி)
இந்த தேதிகளின் பிறந்தவர்கள் சந்திரனால் ஆளப்படுகிறார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வெள்ளி, உப்பு, கற்கண்டு போன்ற வெள்ளை நிறப் பொருட்கள், முத்துக்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவது நல்லது. இது மன உணர்வுச் சமநிலை மற்றும் நிலையான பண வரவைக் கொண்டு வருகிறது.
மூல எண் 3 (3, 12, 21, 30 ஆகிய தேதி)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் குரு பகவானால் ஆளப்படுகிறார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கம், புத்தகங்கள் அல்லது ஆன்மீகப் பொருட்களை வாங்கலாம். இல்லாவிட்டால் புதிதாக ஏதாவது ஒரு வகுப்பில் சேர நினைத்தாலும் அதை செய்யலாம். இது ஞானம் மற்றும் வளர்ச்சியின் மூலம் செல்வத்தைப் பெருக்குகிறது.
மூல எண் 4 (4, 13, 22, 31 ஆகிய தேதி)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ராகுவால் ஆளப்படுகிறார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மின்னணுப் பொருட்கள், நவீனக் கருவிகள் (Gadgets), தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் போன்றவற்றை வாங்குவது நல்லது. இது திடீரென ஏற்படும் நிதி ஏற்ற இறக்கங்களைச் சீர்படுத்துகிறது.
மூல எண் 5 (5, 14, 23)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புதனால் ஆளப்படுகிறார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வணிகக் கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், வர்த்தகம் சார்ந்த பொருட்கள் போன்றவற்றை வாங்குவது நல்லது. இது வருமான வாய்ப்புகளையும் விரைவான பண வரவையும் அதிகரிக்கிறது
மூல எண் 6 (6, 15, 24)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆடம்பரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், ஆடைகள், அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவது நல்லது. இது செல்வச் செழிப்பு, வசதி மற்றும் நிதி ஆதாயங்களை ஈர்க்கிறது.
மூல எண் 7 (7, 16, 25)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவால் ஆளப்படுகிறார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் படிகங்கள் (Crystals), தியானக் கருவிகள், ஆன்மீக புத்தகங்கள் போன்றவற்றை வாங்குவது நல்லது. இது உள்ளுணர்வு மற்றும் மறைந்திருக்கும் செல்வ ஆசீர்வாதங்களை வலுப்படுத்துகிறது.
மூல எண் 8 (8, 17, 26)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சனி பகவானால் ஆளப்படுகிறார்கள். இவர்கள் அட்சய திருதியை நாளில் சொத்து சார்ந்த பொருட்கள், நீண்ட கால முதலீடுகள், அடர் நீல நிறப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவது நல்லது. இது நிலையான மற்றும் நீண்ட காலச் செல்வத்தை உருவாக்குகிறது.
மூல எண் 9 (9, 18, 27)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் செவ்வாயால் ஆளப்படுகிறார்கள். இவர்கள் அட்சய திருதியை நாளன்று நிலம், சிவப்பு நிறப் பொருட்கள், உடற்பயிற்சி அல்லது செயல் சார்ந்த கருவிகள் போன்றவற்றை வாங்குவது நல்லது. இது ஆற்றல், தைரியம் மற்றும் நிதி சார்ந்த செயல்பாடுகளை அதிகரிக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
