Latest Updates
-
இந்திய மாம்பழங்களுக்கு தடை விதித்த ஜப்பான்: உலக புகழ்பெற்ற இந்திய மாம்பழ வகைகளும்.. அவற்றின் பிறப்பிடமும்.. -
மணி பிளான்ட் செடியை இந்த திசையில் வைத்தால் போதும்… பண வரவு தானாக அதிகரிக்கும் ரகசியம்! -
அடுத்தடுத்து 4 முறை நிலையை மாற்றும் சனி பகவான்: ஜூலை முதல் இந்த 4 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
சாமை கார கொழுக்கட்டையும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 30 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப்போகுதாம் -
ஜூன் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
3 கத்திரிக்காயும், 4 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. எல்லாத்துக்கும் பக்காவா இருக்கும்.. -
வீட்டில் புகைபிடிக்கும் பழக்கம் இருக்கா? உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை நீங்களே இப்படித்தான் அழிக்கிறீர்கள்! -
முகத்தில் உள்ள கருமையை போக்கணுமா? அப்ப ஓட்ஸை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
பெற்றோர் எதிர்ப்பால் பிரிய வேண்டுமா? லிவ்-இன் ஜோடிகளுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
Chithirai Matha Rasi Palan 2026: சித்திரை மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாவும் இருக்கும்?
Chithirai Matha Rasi Palan 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் ஏப்ரல் 14 ஆம் தேதி ராசியை மாற்றுகிறார். அப்பெயர்ச்சியின் போது சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சித்திரை மாதம் பிறக்கிறது. அதோடு பராபவ வருடமும் பிறக்கிறது.
இந்த மேஷ ராசி சூரியன் உச்சம் பெறும் ராசியாகும். இதனால் இந்த சூரிய பெயர்ச்சி மிகவும் செல்வாக்குமிக்கதாக கருதப்படுகிறது. மேலும் இந்த மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். ஜோதிடத்தில் சூரியனும், செவ்வாயும் நட்பு கிரகங்களாகும்.

எனவே இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒருவகையில் காணப்பட்டாலும், சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது சூரிய பெயர்ச்சியால் பிறக்கும் சித்திரை மாதமானது 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் சித்திரை மாதமானது சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மேலும் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் புதிதாக ஏதாவது ஒன்றை தொடங்கி, அதில் நல்ல வெற்றியையும் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் சித்திரை மாதத்தில் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மன அமைதியைப் பெற பொறுமையாக இருக்க வேண்டும். முதலீடுகளை செய்ய இந்த மாதம் சிறந்ததாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் சித்திரை மாதத்தில் வருமானத்தில் உயர்வு ஏற்படும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் சித்திரை மாதத்தில் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுரவயில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பதவி, கௌரவம் மற்றும் அதிகாரம் போன்றவை கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சித்திரை மாதமானது மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் கனவு இம்மாதத்தில் நிறைவேறும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் சித்திரை மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். திடீர் செலவுகளை அடிக்கடி சந்திக்க நேரிடும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் சித்திரை மாதத்தில் அகங்காரத்தில் உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் நண்பர்களுடனான உறவில் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் சித்திரை மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். தேவையற்ற செலவுகளை உங்களால் கட்டுப்படுத்த முடியும்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சித்திரை மாதத்தில் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். செல்வம் இரட்டிப்பாகும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் சித்திரை மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் திடீர் மாற்றங்களைக் காணக்கூடும். குடும்பத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம். தன்னம்பிக்கை மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் சித்திரை மாதத்தில் கும்ப ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சனைகள் தீர்ந்து உடல்நலம் சிறப்பாக இருக்கும். நண்பர்களுடன் சேர்த்து புதிதாக முதலீடுகளை செய்ய திட்டமிடுவீர்கள்.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் சித்திரை மாதத்தில் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவடையும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் இம்மாதத்தில் கிடைக்கும். அதை பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் உயரத்தை அடைவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


