Latest Updates
-
சன்டே ஸ்பெஷல் பாலக் க்ரீன் சிக்கன் 65 - எப்படி செய்றது-ன்னு பாத்து மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க! -
நுங்கு உடல் சூட்டை குறைக்குமா? சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் நுங்கு சாப்பிடலாமா? - டாக்டர் பதில்கள்! -
138 நாட்களுக்கு வக்ரமாகும் சனி பகவான்: இந்த 3 ராசிக்காரங்க நிறைய பணத்தை சம்பாதிப்பாங்களாம்! உங்க ராசி என்ன? -
மணமணக்கும் கிராமத்து ஸ்டைல் வறுத்தரைச்ச சிக்கன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 12 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் தேடிவருமாம் -
வார ராசிபலன் (12 ஏப்ரல் 2026-18 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு கேட்ட வரம் கிடைக்குமாம் -
மணத்தக்காளி கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
வாஸ்து படி வீட்டில் இந்த இடங்களில் கண்ணாடி மாட்டினால் உங்கள் செல்வம் பலமடங்கு பெருகுமாம் -
வெயில் காலத்தில் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க - இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க -
மங்களூர் ஸ்பெஷல் முளைகட்டிய பாசிப்பயறு குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும்
தமிழ் புத்தாண்டு நாளில் அழகா வெள்ளையா ஜொலிக்கணுமா? அப்ப இந்த உளுந்து ஃபேஸ் பேக்கை போடுங்க!
Tamil New Year 2026 Beauty Tips In Tamil: தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டின் முதல் நாளில் பலரும் காலையில் எழுந்ததும் கனி காணுதலுக்கு பின், குளித்துவிட்டு, புதிய ஆடைகளை அணிந்து, கோவிலுக்கு சென்று இந்த புத்தாண்டு சிறப்பாக இருக்க வழிபாடுகளை செய்வோம். அப்படி புதிய ஆடைகளை அணியும் போது, முகம் பிரகாசமின்றி பொலிவிழந்து கருப்பாகவும், டல்லாகவும் இருந்தால் நன்றாக இருக்காது தானே?
எனவே இந்நிலையில் சருமத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி சரும நிறத்தை அதிகரிக்கவும், சருமத்திற்கு ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். அதுவும் இவற்றை அழகு நிலையங்களுக்கு சென்று தான் போட வேண்டும் என்பதில்லை. நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வரும் போது, சரும செல்களின் ஆரோக்கியமும் மேம்படும் மற்றும் சருமமும் பளிச்சென்று பிரகாசமாக ஜொலிக்கும்.

சருமத்தின் நிறத்தை சட்டென்று அதிகரிக்க உளுத்தம் பருப்பு கொண்டு ஃபேஸ் பேக் போட்டால் உடனடி மாற்றத்தைக் காணலாம் என்று ஆயுர்வேத டாக்டர் ஆஷா லெனின் அவர்கள் கூறியுள்ளார். அதுவும் உளுத்தம் பருப்புடன் பால் சேர்த்து ஃபேஸ் பேக் போடும் போது, சட்டென்று சருமத்தின் நிறம் அதிகரித்து நல்ல மாற்றம் தெரியும் என்று டாக்டர் கூறியுள்ளார். இந்த உளுந்து ஃபேஸ் பேக்கை எப்படி தயாரித்து பயன்படுத்த வேண்டும் என்பதை இப்போது காண்போம்.
தேவையான பொருட்கள்:
* முழு உளுந்து - 2 ஸ்பூன்
* காய்ச்சாத பால் - சிறிது
தயாரிக்கும் முறை:
* முழு உளுத்தம் பருப்பை பால் சேர்த்து, குறைந்து 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பருப்பு நன்கு ஊறிய பின், அதை மிக்சர் ஜாரில் பால் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, நன்கு 15-20 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, பால் பயன்படுத்தி, மென்மையாக ஸ்க்ரப் செய்து தேய்த்து குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தும் போது சரும நிறத்தில் உடனடி மாற்றத்தை காணலாம்.
யாரெல்லாம் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம்?
கழுத்தைச் சுற்றி கருப்பாக இருப்பவர்கள், கரும்புள்ளிகளைக் கொண்டவர்கள், வாயைச் சுற்றி கருப்பாக இருப்பவர்கள், கண்களைச் சுற்றி கருவளையத்தைக் கொண்டவர்கள் இந்த உளுந்து ஃபேஸ் பேக்கை பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள கருமை நீங்கி, பளிச்சென்று வெள்ளையாகி இருப்பதைக் காணலாம் என்று டாக்டர் கூறினார்.
வேறு சில உளுந்து ஃபேஸ் பேக்குகள்:
1. முகப்பருவை போக்கும் உளுந்து ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு இரவு முழுவதும் ஊற வைத்த 1/2 கப் உளுத்தம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கிளிசரின் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த பேஸ்ட்டை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை ஒருநாள் விட்டு ஒருநாள் பயன்படுத்தி வர முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
2. சீரற்ற சரும நிறத்தை சீராக்கும் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு 8-9 பாதாம் மற்றும் 1/4 கப் உளுத்தம் பருப்பு இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் ஊற வைத்த பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம்.
3. வெயிலால் கருமையானவர்களுக்கான ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு இரவு முழுவதும் ஊற வைத்த 1/4 கப் உளுத்தம் பருப்பை ஜாரில் எடுத்து, அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை வெயில் அதிகம் படும் இடங்களில் தடவி 15 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். சிறந்த பலனைப் பெற, தினமும் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications













