Latest Updates
-
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் ஏப்ரல் 30 வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?
Mercury Transit In Pisces 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன் ஏப்ரல் 11 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைந்தார்.
இந்த மீன ராசியில் புதன் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இருப்பார். இந்த மீன ராசி புதன் நீச்சமடையும் ராசியாகும். அதாவது புதன் பலவீனமான நிலையில் இருக்கும் ராசியாகும். ஆனால் இந்த ராசியின் அதிபதி குரு பகவான் என்பதால், பலர் நீச்சபங்க ராஜயோகத்தை அனுபவிக்கவுள்ளனர்.

அதாவது சில ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும், தொழிலில் வளர்ச்சியையும் காண்பதோடு, ஆன்மீகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். இப்போது புதன் மீன ராசிக்கு சென்றுள்ளதால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். எதையும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை அல்லது வணிகம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். திடீரென்று நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். மன அழுத்தம் குறைந்து, மனநிலை மேம்படும். ஆரோக்கிய பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று அமைதியாக நடந்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஆனால் எதையும் யோசிக்காமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகளை நன்கு சிந்தித்து எடுக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவை பேண வேண்டும். ஆனால் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். யாரையும் சார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் அவசரப்படுவதையும் தவிர்க்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரிடமும் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் சண்டை போடுவதையும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திட்டமிட்டு செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை மேம்படும். நண்பர்களின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் அவசரமாக எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். இருப்பினும் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். பணியிடத்தில் இலக்கை அடைந்து வெற்றி பெறுவீர்கள். பதட்டம் குறையும். நிதி நிலைமை மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



