Latest Updates
-
உடல் சூட்டைக் குறைக்கும் கம்பு கூழ் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 07 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: ஏப்ரல் 19 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி மிளகாய் தேச்சா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமயா இருக்கும் -
தலைமுடி அதிகமா கொட்டுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.! -
வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் ஓட்டுப்போட முடியுமா? எந்தெந்த ஆவணங்கள் இருந்தால் ஓட்டுப்போடலாம்? -
மொறுமொறுப்பான வாழைப்பூ பக்கோடா - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.! -
வாஸ்து படி வீட்டின் இந்த இடத்தில் செருப்பு வைப்பது உங்கள் வாழ்க்கையில் வறுமையை உண்டாக்குமாம் -
Vastu Tips: வாஸ்துப்படி, வீட்டின் இந்த 4 இடத்தில் கண்ணாடியை வையுங்க.. வீட்டில் செல்வம் இரட்டிப்பாகும்!
40 நாட்களுக்கு பின் மீன ராசியில் உதயமாகும் சனிபகவான்: ஏப்ரல் 22 முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கபோகுது!
Saturn Rise In Pisces On 22 April 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் தொழில், கடின உழைப்பு, கடமை, கண்ணியம், சோம்பல், நியாயம், நீதி ஆகியவற்றின் காரணியாவார். மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியான சனி பகவான், 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது வக்ர நிலையிலும், அஸ்தமனமாகி உதயமாகவும் செய்வார்.
இப்படி சனியின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அந்த வகையில் தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் மார்ச் 13 முதல் சனி பகவான் அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி சனி பகவான் உதயமாகவுள்ளார். இப்படி சனி பகவான் உதயமாவதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளின் வாழ்விலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் சனி உதயமாவதால் நிதி நிலையில் முன்னேற்றத்தை காண்பதோடு, கடன் தொல்லையில் இருந்து விடுபடவுள்ளனர். மேலும் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். இப்போது சனி பகவான் உதயமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சுக்கிரன் ஆளும் ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவடையும். புதிய வருமான வழிகள் திறக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். தேவையற்ற செலவுகள் குறைந்து, சேமிப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிட்டும். முக்கியமான வேலைகளில் அனுபவசாலிகளின் ஆலோசனையின் பட செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால் அல்லது வணிகத்தை விரிவாக்கம் செய்ய நினைத்தால், இக்காலம் சிறந்ததாக இருக்கும். நன்கு யோசித்து செய்யும் ஒவ்வொரு வேலையிலும் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பிரச்சனையில் இருக்கும் பரம்பரை சொத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, உடல் நலம் மேம்படும். குடும்ப உறுப்பினர் யாரேனும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், சனி உதயத்திற்கு பின் அவரது உடல்நிலை மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications














