Latest Updates
-
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க..
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: ஏப்ரல் 19 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
Venus Transit In Taurus Make Malavya Rajyog 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கங்கள் மற்றும் அவற்றால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் நவகிரகங்களின் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியும் கூட.
இந்த சுக்கிரன் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் ஏப்ரல் 19 ஆம் தேதி தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் மிகவும் மங்களகரமான யோகமான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

பொதுவாக மாளவ்ய ராஜயோகமான சுக்கிரன் தனது சொந்த ராசிகளான ரிஷபம் அல்லது துலாம் ராசியில் இருந்தாலோ அல்லது தனது உச்ச ராசியான மீன ராசியில் இருந்தாலோ உருவாகும். அந்த வகையில் ரிஷப ராசிக்கு செல்வதால் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இதன் விளைவாக நிதி நிலையில் உயர்வு, தொழிலில் முன்னேற்றம் போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் வசதிகளைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறலாம். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகள் குவியும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை உயரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். ஆரோக்கியம் மேம்படும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் கருத்தை திறம்பட வெளிப்படுத்துவீர்கள். இதனால் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சிலருக்கு பெயரும் புகழும் கிடைக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். சமூக அந்தஸ்து உயரும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வருமானத்திலும் உயர்வு ஏற்படலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகள் வலுபெறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


