Latest Updates
-
ருசியான கறிவேப்பிலை சிக்கன் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க -
ஆட்டு நுரையீரல் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் இதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர் -
குரு-புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகம்: ஏப்ரல் 11 முதல் இந்த 6 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டப்போகுது! -
செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 05 ஏப்ரல் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு நினைச்சது நடக்கும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (05 ஏப்ரல் 2026-11 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
சுவையான வேர்கடலை புதினா சட்னி ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க -
வரப்போகும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் பணக்கார மற்றும் ஏழை வேட்பாளர்கள் யார் தெரியுமா? -
காரசாரமான நெல்லூர் சிக்கன் வறுவல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
கள்ள உறவு அதிகமாக இருக்கும் இந்தியாவின் டாப் 5 நகரங்கள் - ஆய்வு சொல்லும் அதிர்ச்சிகரமான செய்தி
30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் ஒன்றிணையும் 4 கிரகங்கள்: ஏப்ரல் 11 முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கும்?
Chaturgrahi Yog 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து யோகங்களையும் உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுமட்டுமின்றி, இந்த ராசியில் சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களும் பயணித்து வருகின்றன. இந்நிலையில் ஏப்ரல் 11 ஆம் தேதி கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும் நுழைந்து பயணிக்கவுள்ளார். இப்படி புதன் மீன ராசிக்குள் நுழைந்ததும், மீன ராசியில் சனி, செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகமானது மீன ராசியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், சிலருக்கு மோசமாக இருக்கலாம். இப்போது 30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது இதனால் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மன அழுத்தம் நீங்கி, மன அமைதி அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நண்பர்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் பணிபுரியும் இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலை தொடர்பாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சற்று சவால்கள் நிறைந்ததாக இருக்கும். எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட நேரிடலாம். மொத்தத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் பிணைப்பு அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்களும் எதிர்பாராத மாற்றங்களைக் காணக்கூடும். வியாபாரிகள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிரிகளை வென்று வீழ்த்துவார்கள். வேலையில் வெற்றிகள் குவியும். போட்டிகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். புதுமண தம்பதிகள் குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். ஊடகம் மற்றும் ஐடி துறையில் இருப்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தில் உள்ளோருடன் நல்லுறவை பேண வேண்டியது அவசியம். நீண்ட காலமாக சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமையில் நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்ற பாதை திறக்கக்கூடும். சமூகத்தில் மற்றும் பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications















