மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்: ஏப்ரல் முதல் இந்த 5 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது...

Saturn Rise In Pisces 2026: வேத ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகம் தான் சனி பகவான். இந்த சனி பகவான் கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பதோடு, அவ்வப்போது அஸ்தமனமாகி, உதயமாகவும் செய்வார். அப்படி சனி பகவானின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் குரு பகவானின் ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார். அதோடு மீன ராசியில் மார்ச் 13 ஆம் தேதி முதலாக அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி சனி பகவான் உதயமாகவுள்ளார்.

Saturn Rise In Pisces 2026 List Of Lucky Zodiac Signs

சனி பகவான் உதயமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 5 ராசிக்காரர்கள் சனி உதயமாவதால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது மீன ராசியில் சனி உதயமாவதால் சிறப்பான பலன்களைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாவதால் ரிஷப ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். நீண்ட கால ஆசைகளும், விருப்பங்களும் நிறைவேறும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாவதால், இந்த ராசிக்காரர்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை கணிசமாக உயரும். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, உடல்நலம் மேம்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மகரம்

மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். செல்வம் பெருகும். தைரியமும் வீரமும் அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, March 28, 2026, 18:00 [IST]
Desktop Bottom Promotion