Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கையில் பணம் குவியப்போகுது...
Sun Nakshatra Transit On 31 March 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மற்றும் நட்சத்திரத்தை மாற்றும். அப்படி கிரகங்களின் நிலைகளில் மாற்றம் ஏற்படும் போது, அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.
அந்த வகையில் நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். தற்போது சூரியன் மீன ராசியில் உள்ளார். இந்நிலையில் சூரியன் மார்ச் 31 ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன்.

இந்த புதனின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால், சில ராசிக்காரர்கள் நல்ல செல்வத்தைப் பெறவுள்ளனர். அதோடு தொழிலிலும் நல்ல வளர்ச்சியைக் காணவுள்ளனர். இப்போது ரேவதி நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் நிதி நிலையில் வளர்ச்சியையும், தொழிலில் முன்னேற்றத்தையும் காணப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
சூரியன் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுகு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலனாக பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தந்தையுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கி, அவருடனான உறவு மேம்படும்.
சிம்மம்
ரேவதி நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் சிம்ம ராசிக்காரர்கள் திடீரென்று நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தினருடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது.
தனுசு
சூரியன் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் தனுசு ராசிக்காரர்கள் பல இன்பங்களையும், வசதிகளையும் பெறுவார்கள். திடீரென்று நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப் பிரச்சனைகள் தீரும். சூரியனின் அருளால் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
மீனம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்கள் வாழ்வில் பல மாற்றங்களைக் காண்பார்கள். வருமானத்தில் பெரிய அளவில் உயர்வு ஏற்படும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிதாக முதலீடுகளை செய்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். பல புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



