Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
1 வருடம் கழித்து உச்ச ராசிக்கு செல்லும் சூரியன்: ஏப்ரல் மாதத்தில் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்..
Sun Transit In Aries On April 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். மேலும் இவர் மாதத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும், உலகளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது சூரியன் குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார். மேலும் இந்த மீன ராசியில் ஏப்ரல் மாதத்தின் முதல் பாதி வரை இருப்பார். அதன் பின் ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் தனது உச்ச ராசியான மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மேஷ ராசியின் அதிபதி தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியான செவ்வாய் ஆவார்.

இந்த செவ்வாயின் ராசிக்குள் சூரியன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர்.
சூரியன் இந்த மேஷ ராசியில் மே 15 ஆம் தேதி வரை இருந்து, பின் சுக்கிரனின் ரிஷப ராசிக்குள் நுழைவார். இப்போது 1 வருடம் கழித்து தனது உச்ச ராசிக்கு செல்லும் சூரியனால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான நன்மைகளைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தலைமைத்துவ திறன்களும் மேம்படும். ஆளுமையில் நல்ல மாற்றத்தைக் காணக்கூடும். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணலாம். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சிலருக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
வணிகர்கள் தங்களின் புத்திசாலித்தனமான திட்டத்தால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து செயல்படுவார்கள். போட்டி தேர்வுகளில் பங்கு கொண்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறலாம். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும், புகழும் அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். இதன் காரணமாக இக்காலத்தில் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிலான ஒரு முக்கிய முடிவை எடுப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிறைய ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
மன அமைதி கிடைப்பதோடு, தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கலாம். அதோடு புதிய பொறுப்புக்களும் வழங்கப்படலாம். வணிகர்களுக்கு இப்பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. ஏதாவது ஒரு விஷயத்தால் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மேலும் இக்காலத்தில் பேச்சை சற்று கட்டுப்படுத்த வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல துறைகளில் நல்ல பலன்களைப் பெறக்கூடும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு இப்பெயர்ச்சி சிறப்பானதாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் சிறந்து விளங்குவார்கள். பணியிடத்தில் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


