Latest Updates
-
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 4 ராசிக்காரங்க கோடீஸ்வரராகப் போறாங்களாம் - உங்க ராசி என்ன? -
வெயில் வாட்டி வதைக்குதா? வீட்டை ஜில்லென்று மாற்ற இந்த 5 செடிகள் போதும், அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
தோசையின் தலைநகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? இது தமிழ்நாட்டில் இல்லையாம் -
செஃப் வாணி ஸ்டைல் தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 09 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ராஜா மாதிரி வாழப்போறாங்களாம் -
மேஷ ராசியில் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகம் 2026: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியப் போகுது.. -
சப்பாத்திக்கு ஒருடைம் முட்டைக்கோஸ் பச்சை குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! உங்கள் தனிப்பட்ட சாட்கள் இனி பாதுகாப்பில்லை? இந்த மாற்றத்தை உடனே கவனிங்க! -
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு!
புதன் உருவாக்கும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் அசுர வளர்ச்சி ஏற்படும்..
Neech Bhang Rajyog On 11 April 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றக்கூடியவர்.
இப்படி புதனின் நிலையில் மாற்றம் ஏற்படுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். தற்போது புதன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 11 ஆம் தேதி புதன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். மீன ராசியானது புதன் நீச்சமடையும் ராசியாகும். இந்த மீன ராசிக்குள் புதன் நுழைவதால் நீச்சபங்க ராஜயோகம் உருவாகவுள்ளது.

ஜோதிடத்தில் எந்த ராசியின் கிரகம் நீச்சமடைகிறதோ, அந்த ராசியின் அதிபதி 1, 4, 7, 10 ஆகிய கேந்திர வீடுகள் அல்லது 1, 5, 9 ஆகிய திரிகோண வீடுகளில் இருந்தால், நீச்சபங்க ராஜயோகமானது உருவாகும். அந்த வகையில் புதன் மீன ராசியில் இருந்து, மீன ராசியின் அதிபதி குரு பகவான் கேந்திர வீட்டில் அதாவது 4 ஆவது வீட்டில் இருந்து, நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்கவுள்ளது.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், புதிய வருமான ஆதாரங்களையும் பெறுவார்கள். இப்போது மீன ராசிக்கு செல்லும் புதனால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகத்தால் தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
நீச்சபங்க ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களின் புத்திசாலித்தனமும், தொடர்பு கொள்ளும் திறனும் மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணியிடத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும்.
வேலைப்பளு அதிகரித்தாலும், உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். இருப்பினும், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை தலைவலி, தூக்கமின்மை, உடல் சோர்வு போன்றவற்றால் அவதிப்படக்கூடும். முக்கியமாக இக்காலத்தில் அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
தனுசு
நீச்சபங்க ராஜயோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் தங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
ஆனால் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். முடிவு எடுப்பதில் குழப்பத்தை சந்திக்கலாம். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும் வாய்ப்புள்ளது. எனவே பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
நீச்சபங்க ராஜயோகத்தால் மீன ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உறவுகள் வலுவடையும்.
ஆனால் புதன் பலவீனமான நிலையில் இருப்பதால், குழப்பம், முடிவெடுப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். கண்மூடித்தனமாக யாரையும் நம்புவதைத் தவிர்க்க வேண்டும். பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். முதலீடுகளை அவசரப்பட்டு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


