Latest Updates
-
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க.. -
அக்டோபர் 09 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் கஷ்டங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்.. -
1/4 கிலோ வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க - இதுவரை நீங்க சாப்பிடாத சுவையில் இருக்கும் -
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்..
2 ஆண்டுக்கு பின் இணையும் சூரியன்-செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் இயக்கங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மே மாதம் ஒரு முக்கிய கிரக சேர்க்கைநடைபெறுகிறது. மே 11 அன்று, சூரியனும் செவ்வாயும் மேஷ ராசியில், ஒரே நேர்கோட்டில் இணைந்து, ஒரு முக்கிய வானியல் சேர்க்கையை உருவாக்கவுள்ளன.
சூரியன் நவகிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார், அதேசமயம் செவ்வாய் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுகிறார். சூரியன் அதிகாரம், தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது, அதேவேளையில், செவ்வாய் துணிச்சலையும் செயல்திறனையும் குறிக்கிறது. இந்த கிரக சேர்க்கையானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்கள் இந்த கிரக சேர்க்கையால் அற்புதமான பலன்களை அளிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த கிரக சேர்க்கையால் சாதகமான பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த கிரக சேர்க்கையால் மேஷ ராசிக்காரர்கள் புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் உருவாகலாம். பொருளாதாரநிலை கடந்த காலத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பும் பல விஷயங்களை அடைய முடியும். உங்களைப் பற்றி பலருக்கு இருந்த தவறான எண்ணங்கள் முடிவுக்கு வரும்.
திருமணமான தம்பதிகளிடையே நெருக்கமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் அவர்களின் செயல்திறன் அதிகரிப்பதால், பல்வேறு சாதனைகளும், அங்கீகாரமும் தேடிவரும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கும்.
சிம்மம்
சூரியன் சிம்ம ராசியின் ஆளும் கிரகமாக இருப்பதால் இது அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான பலன்களை ஏற்படுத்தும். இந்த கிரக சேர்க்கையால் அவர்களின் பொருளாதார சிக்கல்கள் முடிவுக்கு வரப்போகிறது. வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகளுக்கான வாய்ப்புகள் தேடிவரும். அவர்களின் திட்டங்கள் அனைத்தும் சரியாக நிறைவேறுவதால் அவர்கள் வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். இதனால் அவர்களின் மனஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
வேலையில் சாதனைகளும், அதிர்ஷ்டமும் நிறைந்திருக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட பெரிய லாபத்தை பெற முடியும், இது அவர்களின் சேமிப்பை அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் சுப நிகழ்வுகள் நடைபெறலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் அவர்களே எதிர்பார்க்காத நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த நேரத்தில் அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நிதி நிலை நினைத்ததை விட சிறப்பாக இருக்கும், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும். வேலையில் மிகுந்த மகிழ்ச்சியும் அதன் வெற்றியும் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும்.
வேலை தேடுபவர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் திறமைக்கேற்ப லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம். திருமணத்தில் சண்டை சச்சரவுகள் குறையும். அவர்கள் துணையுடன் அதிக நெருக்கமாக இருப்பார்கள். அவர்களின் ஆரோக்கியம் எதிர்பார்த்ததை விட திருப்தியாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

