Latest Updates
-
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா?
நுங்கு உடல் சூட்டை குறைக்குமா? சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் நுங்கு சாப்பிடலாமா? - டாக்டர் பதில்கள்!
Summer Special Nungu: கோடைக்காலம் வந்துவிட்டாலே மார்கெட்டுகளில் பலவிதமான சுவையான மற்றும் நீர்ச்சத்துள்ள நிறைய பழங்களை காணலாம். கோடைக்காலம் என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வருவது மாம்பழம், நுங்கு, தர்பூசணி, முலாம் பழம் போன்றவையாகவே இருக்கும். இந்த பழங்கள் மற்ற காலங்களை விட கோடையில் தான் விலைக் குறைவிலும், அற்புதமான சுவையிலும் கிடைக்கும். முக்கியமாக நுங்கிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கும்.
பனை மரத்தில் இருந்து பெறப்படும் நுங்கு அளவில் சிறியதாக இருந்தாலும், அதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். நுங்கில் உள்ள சத்துக்கள் என்றால் 100 கிராம் நுங்கில் தோராயமாக 40 கலோரிகளும், 10 கிராம் மாவுச்சத்தும், 85-90 சதவீதம் நீர்ச்சத்தும் உள்ளது. மற்றபடி பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை குறைவான அளவில் தான் உள்ளன.

இந்த நுங்கு குறித்து பலரது மனதிலும் ஒருசில கேள்விகள் எப்போதும் இருந்தவாறு இருக்கும். அப்படிப்பட்ட ஒருசில பொதுவான 5 கேள்விகளுக்கு குழந்தைநல மருத்துவரும், உணவு ஆலோசகருமான டாக்டர். அருண்குமார் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வாருங்கள், அது என்னவென்பதைக் காண்போம்.
கேள்வி 1: நுங்கு குளிர்ச்சியை ஏற்படுத்துமா?
"நுங்கு குளிர்ச்சியானது மற்றும் உடல் சூட்டைத் தணிக்கும் என்று பொதுவாக நம்பப்படும் ஒன்றாகும். ஆனால் அறிவியல் பூர்வமாக பார்த்தால், நுங்கு என்பது 85-90 சதவீதம் நீரால் ஆனது. எனவே வெயில் காலத்தில் அதிகமான வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்.
இப்படி நீர்ச்சத்து குறையும் போது சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும், அதிக வெப்பத்தால் சருமத்தில் வெயில் கொப்பளங்கள் வரலாம். இவற்றையெல்லாம் வைத்து தான் உடல் சூடு பிடித்துள்ளது என்று கூறுவதுண்டு. இந்த பிரச்சனைக்கு தீர்வு என்றால் நீர்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுக்க வேண்டும்.
எந்த அளவு நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுக்கிறோமோ, அந்த அளவு உடல் சூடு என்று கூறப்படும் பிரச்சனைகள் எல்லாம் குறையும். எனவே நுங்கில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை அதிகமாக உட்கொள்ளும் போது, உடலின் நீர்ச்சத்து அதிகரிக்கும். நேரடியாக உடல் சூட்டை குறைக்காவிட்டாலும், உடல் சூட்டின் அறிகுறிகளை தணிக்க கட்டாயம் உதவும்" என்று கூறினார்.
கேள்வி 2: சர்க்கரை நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா?
"100 கிராம் நுங்கில் 10 கிராம் மாவுச்சத்து உள்ளது. 100 கிராம் நுங்கு என்பது அதன் அளவைப் பொறுத்து 1 முழு நுங்கு வரலாம். அதுவும் 3 முழு நுங்கை சாப்பிட்டாலே 30-40 கிராம் மாவுச்சத்து தான் உடலினுள் செல்லும். சொல்லப்போனால் இது நாம் சாதாரணமாக சாப்பிடும் சாதம், இட்லி, தோசை மற்றும் பழங்களுடன் ஒப்பிடுகையில் மாவுச்சத்து குறைவு தான்.
அந்த வகையில் பார்க்கும் போது, சர்க்கரை நோயாளிகள் 1-2 நுங்கை சாப்பிடலாம். அதற்காக கிலோகணக்கில் சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கத் தான் செய்யும். எனவே இதை நினைவில் கொள்ளுங்கள்" என்று கூறினார்.
கேள்வி 3: எடை குறைப்பவர்கள் நுங்கு சாப்பிடலாமா?
"எடை குறைப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம். இருப்பதிலேயே கலோரி குறைவாக, மாவுச்சத்து மிதமான அளவு கொண்ட உணவுப் பொருள் என்பதால், தாராளமாக 4-5 நுங்கு சாப்பிடலாம். இதனால் கலோரிகளும், மாவுச்சத்தும் அதிகரிக்காது, உடலில் நீர்ச்சத்தும் அதிகரிக்கும், வயிறும் நிரம்பும். எனவே எடை குறைப்பவர்களுக்கு இது அற்புதமான உணவு" என்று டாக்டர் கூறினார்.
கேள்வி 4: மற்ற பழங்களை விட நுங்கு நல்லதா?
"நிச்சயம் இல்லை. நுங்கின் சிறப்பே அதில் உள்ள நீர்ச்சத்து தான். மற்றப்படி பிற பழங்களை விட நிறைய சத்துக்கள் கொண்டது என்றெல்லாம் கூற முடியாது. உதாரணமாக, கொய்யாப்பழத்தில் இருப்பது போன்று வைட்டமின் சியோ, வாழைப்பழத்தில் உள்ளது போன்று பொட்டாசியமோ இல்லை.
எனவே மற்ற பழங்களுடன் ஒப்பிட முடியாது. ஆனால் கோடைக்காலத்திற்கு ஏற்ற நீர்ச்சத்து நிறைந்த கலோரி மற்றும் மாவுச்சத்து குறைவான ஒரு அற்புதமான சுவையான பழம்" என்று கூறினார்.
கேள்பி 5: நுங்கை சருமத்தில் பயன்படுத்தலாமா?
"கோடையில் சந்திக்கும் முகப்பரு, வியர்க்குரு போன்றவற்றின் மீது நுங்கின் நீர் மற்றும் தசைப்பகுதியை தடவலாமா என்றால் நிச்சயம் தடவலாம். இதனால் ஓரளவு நன்மை கிடைக்கும் என்று சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
நுங்கில் கற்றாழைப் போல் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இல்லாவிட்டாலும், இதில் நீர்த்தன்மையை ஈர்த்து வைக்கக்கூடிய பண்பு இருப்பதால், கோடையில் சருமம் அதிகமாக வறட்சியடையாமல், தோல் வெடிக்காமல் இருக்க உதவுகிறது.
எனவே வியர்க்குரு உள்ளவர்கள் கற்றாழை அளவிற்கு பயனைத் தராவிட்டாலும், மிதமான அளவில் நன்மையைத் தரலாம். ஆனால் அதிகமாக தோல் வெடிப்பு ஏற்பட்டால், தோல் மருத்துவரை அணுக வேண்டும்" என்று கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
