Latest Updates
-
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது!
Saturn, Venus, Ketu Change Nakshatras Consecutively: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றுகின்றன. அதுவும் சக்தி வாய்ந்த 3 கிரகங்கள் அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றவுள்ளன.

அதில் ஏப்ரல் 16 ஆம் தேதி சுக்கிரன் பரணி நட்சத்திரத்தில் இருந்து கிருத்திகை நட்சத்திரத்திற்கும், ஏப்ரல் 17 ஆம் தேதி சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தின் 4 ஆம் பாதத்திற்கும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 20 ஆம் தேதி கேது தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்கும் நுழையவுள்ளன.
இப்படி குறுகிய காலத்தில் அடுத்தடுத்து நட்சத்திரங்களை மாற்றும் 3 கிரகங்களின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த நிகழ்வால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்களால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
அடுத்தடுத்து நடக்கும் சனி, சுக்கிரன் மற்றும் கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் செயல்திறன் மேம்படும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கியிருந்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கைத் துணையுடன் பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உறவுகள் வலுவடையும்.
சிம்மம்
அடுத்தடுத்து நடக்கும் சனி, சுக்கிரன் மற்றும் கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிக்க வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.
கடகம்
அடுத்தடுத்து நடக்கும் சனி, சுக்கிரன் மற்றும் கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் கடக ராசிக்காரர்களின் பெரிய பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும். மன கவலையில் இருந்து விடுபடுவீர்கள். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான வாய்ப்புக்கள் உருவாகும். செல்வம் பெருகும் வாய்ப்புள்ளது. பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பல வழிகளில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும்.
தனுசு
அடுத்தடுத்து நடக்கும் சனி, சுக்கிரன் மற்றும் கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் தனுசு ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிறைய செலவுகளை சந்தித்தாலும், பண வரவு சிறப்பாக இருக்கும். சிலர் மதிப்புமிக்க பொருட்களை வாங்கி மகிழலாம். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். படைப்பாற்றல் அதிகரிக்கும். தலைமைப்பண்புகள் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



