Latest Updates
-
ஹைதராபாத் சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டல் சுவையில் அட்டகாசமாக இருக்கும் -
வார ராசிபலன் (12 July 2026-18 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சட்டையில் ஏன் பாக்கெட் எப்போதும் இடதுபுறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? காரணம் தெரிஞ்ச ஷாக் ஆகிருவீங்க -
1 கப் பாஸ்மதி அரிசி இருந்தா இந்த காஷ்மீரி புலாவை செஞ்சு பாருங்க - பைவ் ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
இந்த 4 நபர்களுடன் சண்டையிடுவது உங்கள் நிம்மதியை காணாமல் போகச்செய்யுமாம் - சாணக்கிய ரகசியம் -
கீரை வாங்குனா அடுத்தமுறை இந்த ஆந்திரா கீரை வேப்புடுவை செய்யுங்க - கீரை பிடிக்காதவர்களும் ஆசையா சாப்பிடுவாங்க -
கஜகேசரி ராஜயோகம் ஜூலை 14-ல் வரப்போவதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சத்தான.. சோள உப்புமா - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 11 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வை: ஆகஸ்ட் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்..
சனி பகவான் உதயமாவதால் ஏப்ரல் 22 முதல் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. உங்க ராசி என்ன?
Saturn Rise In Pisces 2026: வேத ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பாரபட்சம் பாராமல் பலன்களைத் தரக்கூடியவர். இப்படிப்பட்ட சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியான சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார்.
அதுவும் கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் சனி பகவான் அஸ்தமனமாகி, பலவீனமான நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி சனி பகவான் உதயமாகவுள்ளார். சனி பகவான் உதயமாவதால், அவரது பலம் அதிகரித்து, அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

ஆனால் 3 ராசிக்காரர்கள் சனி உதயமாவதால் வாழ்க்கையில் திடீர் மாற்றங்களைக் காணக்கூடும். முக்கியமாக நிதி ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதோடு தொழில் மற்றும் ஆரோக்கியத்திலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது சனி பகவான் மீன ராசியில் உதயமாவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பணத்தை சம்பாதிக்க வேண்டுமென்ற முயற்சிகள் தோல்வியடையும். கடனாக கொடுத்த பணம் கிடைக்காமல் சிரமப்படக்கூடும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தம்பதிகளிடையே மனக்கசப்பு அதிகரிக்கும். எதையும் அவசரப்பட்டு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரும் இழப்புக்களை சந்திக்க நேரிடும். தொழிலில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். பண பரிவர்த்தனைகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். முதலீடு விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறு தவறுகளும் பெரிய இழப்பை ஏற்படுத்தும். மறைந்திருந்த எதிரிகள் ஏப்ரல் 22 முதல் தீவிரமாக உங்களுக்கு எதிராக செயல்படலாம். எதிலும் வெற்றியைப் பெற கடின உழைப்பு தேவைப்படும். ஆரோக்கிய பிரச்சனைகளை புறக்கணித்தால், மருத்துவ செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். பண விஷயத்தில் வழக்கத்தை விட கவனமாக இருக்க வேண்டும். மொத்தத்தில் அவசரம் பெரும் இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதை மறவாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும். பிடிவாதம், கவனக்குறைவு, ஆணவம் போன்றவை பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தும். யாருடனும் மோதல்களில் அல்லது வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறுக்குவழியில் பணத்தை சம்பாதிக்க முயற்சித்தால், லாபத்திற்கு பதிலாக நஷ்டத்தையே சந்திக்க நேரிடும். எனவே எதிலும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


