Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
138 நாட்களுக்கு வக்ரமாகும் சனி பகவான்: இந்த 3 ராசிக்காரங்க நிறைய பணத்தை சம்பாதிப்பாங்களாம்! உங்க ராசி என்ன?
Saturn Retrograde 2026: வேத ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் தான் சனி பகவான். ஏனெனில் இவர் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பாரபட்சம் பாராமல் பலன்களைத் தரக்கூடியவர். இந்த சனி பகவான் தற்போது குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவான் வருகிற ஜூலை 27 ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.
இந்த வக்ர நிலையில் குடார் 138 நாட்கள் வரை இருப்பார். அதாவது டிசம்பர் 11 ஆம் தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருப்பார். இப்படி சனி பகவான் வக்ர நிலையில் இருக்கும் போது, சற்று பலவீனமாக இருப்பார். மேலும் கடந்த கால பிரச்சனைகளை தூண்டிவிட்டு, அதை எதிர்கொண்டு அதற்கான தீர்வு காண வழிவகை செய்வார்.

சனி பகவானின் இந்த வக்ர நிலையால் சில ராசிக்காரர்களுக்கு மோசமாகவும், சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். அதுவும் சில ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்வில் எதிர்பாராத மாற்றங்களைக் காணக்கூடும். இப்போது மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கப் போகும் சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி வளர்ச்சியைக் காண்பார்கள். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். வாய்ப்புள்ளது. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளுடன் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் சந்தித்து வந்த தடைகள் நீங்கும். நிதி நிலைமை உயரும். பண வரவு அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக இருக்கும். மன அழுத்தத்தில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நிதி நிலைமை சீராக இருக்கும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடனான உறவு மேம்படும். புதிதாக தொழிலை தொடங்கினால், அதில் நல்ல லாபத்தைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நல பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



