சனி நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 17 முதல் சனி பகவான் இந்த 3 ராசிக்காரர்களை சோதிக்க போகிறார்! ரெடியா இருங்க

Saturn Pada Nakshatra Transit On 17 April 2026: வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இந்த சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

தற்போது சனி பகவான் குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த அதோடு உத்திரட்டாதி நட்சத்திரத்தின் 3 ஆம் பாதத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவான் ஏப்ரல் 17 ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தின் 4 ஆம் பாதத்தில் பயணிக்கவுள்ளார்.

Saturn Pada Nakshatra Transit On 17 April 2026 These Zodiac Signs Face Many Problems

இந்த நட்சத்திரத்தில் அடுத்த ஒரு மாத காலம் பயணிக்க போகிறார். இதனால் இக்காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் அழுத்தத்தையும், வேலையில் தாமதத்தையும், அவசர முடிவுகளால் இழப்புக்களையும் சந்திக்க நேரிடும்.

என்ன தான் சனி பகவான் இவ்வளவு சோதனைகளை கொடுத்தாலும், பொறுமையாக இருந்து, புத்திசாலித்தனமாக யோசித்து செயல்பட்டு, குறுக்குவழிகளில் எதையும் செய்யாமல் தொடர்ந்து வெற்றிக்காக முயற்சித்தால், நிச்சயம் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய வெற்றியைத் தருவார். இப்போது சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 17 முதல் எந்த ராசிக்காரர்களை சனி பகவான் சோதிக்கப் போகிறார் என்பதைக் காண்போம்.

மேஷம்

சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் நிறைய சவால்களை சந்திக்கலாம். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் பல தடைகளை சந்திக்கக்கூடும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் எதிர்பாராத திடீர் மாற்றங்களும் ஏற்படலாம். முக்கியமாக அவசரமாக எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும். பண விஷங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் உணர்ச்சி ரீதியாக ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். உறவுகளில் தவறான புரிதல்களால் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். இக்காலத்தில் அமைதியாக இருக்க முயற்சிக்க வேண்டும். முக்கியமாக பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். எந்த பிரச்சனையையும் பேசி தீர்க்க முயல வேண்டும்.

துலாம்

சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் வெற்றிக்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் வெற்றி மெதுவாகவே கிடைக்கும். தொழில் சற்று மந்தமாக இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கை குறையும். இதனால் எந்த ஒரு வேலையையும் தன்னால் முடிக்க முடியுமா என்ற எண்ணம் எழும். இருப்பினும் தொடர்ந்து கடினமாக உழைத்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

மகரம்

சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு சற்று சவாலானதாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிப்பதால் மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும். அதோடு எதிர்பாராத செலவுகளும் அதிகரிக்கும். இதனால் பணப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முக்கியமாக பொறுப்புகள் அதிகரிக்கும். இதனால் அழுத்தமும் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, April 9, 2026, 23:17 [IST]
Desktop Bottom Promotion