Latest Updates
-
Aadi Month Rasipalan 2026: ஆடி மாதத்தில் கோடிகளை குவிக்கப் போகும் 5 ராசிக்காரங்க இவங்க தான்! -
ஜூலை 16-ல் சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றியையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் தோற்றம் மட்டுமல்ல ஆன்மாவும் அழகானதாக இருக்குமாம் -
உங்க பல் மஞ்சளா இருக்கா? வெள்ளையாக்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
1/2 கப் கடலைப்பருப்பு இருந்தா டக்குனு இந்த குருமாவை செய்யுங்க - இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வாழைப்பழமும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
AC ரிமோட்டில் நீங்கள் செய்யும் இந்த தவறு உங்க கரண்ட் பில்லை தாறுமாறா அதிகரிக்குமாம் - கரெக்ட்டா யூஸ் பண்ணுங்க -
ஜூலை 07-ல் வக்ர புதனால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண கஷ்டம் குறைந்து செல்வம் பெருகும்.. -
தமிழ்நாட்டின் இந்த ஒரு மாவட்டத்தை மட்டும் ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யவே முடியவில்லையாம் - ஏன் தெரியுமா?
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-செவ்வாய்: மே 10 வரை இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்!
Saturn Mars Conjunction 2026: வேத ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுழுவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் சுமார் 30 ஆண்டுகள் கழித்து இந்த ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார். அதே சமயம் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார்.
இப்படிப்பட்ட செவ்வாய் ஏப்ரல் 02 ஆம் தேதி மீன ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார். இதனால் மீன ராசியில் செவ்வாய் மற்றும் சனியின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இவ்விரு கிரகங்களும் மீன ராசியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணைந்து பயணிக்கின்றனர். அதுவும் இந்த சேர்க்கையால் மே 10 ஆம் தேதி வரை நீடித்திருக்கும்.

இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெற்றுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மூலம் நிதி உதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் இலக்கை அடைந்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல்நலம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை உயரும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகள் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். தலைமைப் பண்புகள் மேம்படும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். பண வரவு அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



