Latest Updates
-
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: ஏப்ரல் 16-ல் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்!
Mahalakshmi Rajyog 2026: ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி, நிலைகளின் மூலமோ, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ சுப மற்றும் ராஜயோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையிலும் உலகிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மீன ராசியில் பயன்படுத்தி வருகிறார். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார்.
இந்நிலையில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் வருகிற ஏப்ரல் 16 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மீன ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையால் மிகவும் மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர்.

அதோடு, வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். மேலும் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் பரிபூர்ண அருள் கிடைத்து, நிதி நிலையில் திடீர் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது மீன ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆனால் இக்காலத்தில் உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுத்துவிடாதீர்கள். உறவுகளில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினரிடையே மனக்கசப்புகள் அதிகரிக்கும். வரவு செலவு விஷயத்தில் வழக்கத்தை விட கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் தொழில் ரீதியாக இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆயினும் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



