Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் முட்டை சிந்தாமணி ரெசிபி - 4 முட்டை இருந்தா இத செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
39 மனைவிகள், 94 குழந்தைகள் என ஆலமரமாய் வாழ்ந்த இந்தியர் யார் தெரியுமா? உலகிலேயே பெரிய குடும்பம் இவரோடதுதான் -
பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..! -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்..
ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஜாக்பாட் அடிக்கப்போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
April 2026 Monthly Career Horoscope In Tamil: 2026 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த ஏப்ரல் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றங்களைக் காணக்கூடும்.
அதோடு கிரக நிலைகளின் மாற்றங்களினால் சில சுப மற்றும் ராஜயோகங்களும் உருவாகின்றன. இதன் விளைவாக சில ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களையும், இன்னும் சிலர் மோசமான பலன்களையும் பெறலாம். இப்போது 2026 ஏப்ரல் மாத கிரக நிலைகளால் தொழில் ரீதியாக மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதமானது மிகவும் சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அல்லது வேலையை மாற்றும் எண்ணம் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடமிருந்து பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் தொழிலில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், அரசு வேலை தொடர்பான முயற்சிகளில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். இருப்பினும் இம்மாதத்தில் பணியிடத்தில் பொறுமையாக இருப்பது அவசியம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் புதுமையான யோசனைகள் நல்ல லாபத்துடன், வெற்றியையும் தரும். IT துறையில் இருப்பவர்களுக்கு இம்மாதம் மிகவும் சிறந்த முன்னேற்றத்தைத் தரும் மாதமாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் வேலை மாற்றம் குறித்து சிந்திக்கலாம். தொழிலில் சில சவால்களை சந்தித்தாலும், அதை சமாளிக்கும் திறனும் இருக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் தலைமைத்துவத்தை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் திறமையை கவனிப்பதோடு, பாராட்டவும் செய்வார்கள். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான சாத்தியம் உண்டு.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் பணியிடத்தில் சில அழுத்தங்கள் இருக்கும். ஆனால் திட்டமிட்டு வேலைகளை செய்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் வழக்கத்தை விட அதிகமாக கவனம் செலுத்துவது மிக முக்கியம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் கூட்டாண்மை தொழில்களில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் இருந்தால், இம்மாதம் அதற்கு உகந்ததாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் கடின உழைப்பிற்கான நல்ல பலன் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் மெதுவாக இருந்தாலும் உறுதியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதமானது தொழில் ரீதியாக சிறப்பானதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு வேலை மாற்றம் அல்லது வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் தொழிலில் நிலைத்தன்மை இருக்கும். செய்யும் வேலையில் முன்னேற்றம் மெதுவாக இருந்தாலும் உறுதியாக இருக்கும். ஆனால் முதலீடுகளில் கவனம் தேவை. அவசரப்பட்டு எந்த வேலையையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் தொடர்புகள் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஸ்டார்ட்அப் முயற்சிகள் வெற்றி பெறும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் தொழிலில் வளர்ச்சி ஏற்படுவதோடு, நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலை மற்றும் படைப்பாற்றல் துறையில் இருப்பவர்களுக்கு இம்மாதத்தில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


