Latest Updates
-
சுக்கிரன் சூரியன் ஆளும் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 5 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா தஞ்சாவூர் கொத்சு செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வார ராசிபலன் (05 July 2026-11 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
200 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள்வதற்கு காரணமாக இருந்தது இந்த 5 விஷயங்கள்தான் -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
மொறுமொறு ராகி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மோசமான பலன்களை அனுபவிக்கப் போறாங்களாம்
கேது நட்சத்திர பெயர்ச்சியால் டிசம்பர் வரை இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்!
Ketu Nakshatra Transit 2026: வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் தான் கேது. இந்த கேது மற்ற கிரகங்களைப் போல் முன்னோக்கி நேர்கதியில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர். மேலும் கேதுவிற்கு என்று சொந்த ராசி எதுவும் இல்லை. இப்படிப்பட்ட கேது 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதுமட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
தற்போது கேது சூரிய பகவானின் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 29 ஆம் தேதி கேது தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இந்த நட்சத்திரத்தில் டிசம்பர் வரை இருப்பார். தீய கிரகமாக கருதப்படும் கேது மகம் நட்சத்திரத்திற்கு சென்றுள்ளதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இந்த நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திடீர் செலவுகள் அதிகரித்து, பண பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். மேலும் மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், நன்கு யோசித்து எடுக்க வேண்டும். இப்போது கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் டிசம்பர் வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் வழக்கத்தை விட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திடீரென்று செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் உங்களின் பல வேலைகள் முடிக்க முடியாமல் சீர்குலையலாம். பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். இக்காலத்தில் அவசரப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.
சிம்மம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு டிசம்பர் வரை சவாலான காலமாக இருக்கும். வேலையில் பல தடைகளை சந்திக்க நேரிடும். பண விஷயத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் தேவையில்லாத செலவுகளையும் தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறுசிறு விஷயங்களுக்காக வாக்குவாதங்கள் ஏற்படலாம். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்கள் டிசம்பர் வரை மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.
தனுசு
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் எதிர்பாராத பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தேவையற்ற செவுகளை அதிகம் செய்ய நேரிடும். புதிதாக ஏதாவது செய்ய முயற்சித்தால், தடைகளை சந்திக்க நேரிடும். பயணங்களால் தேவையற்ற செலவுகள் தான் ஏற்படுமே தவிர, எந்த ஆதாயமும் கிடைக்காது. குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும். முக்கியமாக டிசம்பர் வரை இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையையும் மிகவும் கவனமாக செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களின் நிதி நிலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். முதலீடுகளால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். எப்போதும் மன குழப்பத்துடன் இருப்பீர்கள். முடிவெடுக்க முடியாமல் சிரமப்படுவீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தம்பதிகளிடையே தவறான புரிதல்களால் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். மொத்தத்தில் டிசம்பர் வரை பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



