Latest Updates
-
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும்!
Tamil Puthandu Rasi Palan 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. தற்போது சூரியன் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார்.
இப்படி மேஷ ராசியில் சூரியன் நுழையும் போது தான் தமிழ் புத்தாண்டான பராபவ வருடமும், சித்திரை மாதமும் பிறக்கிறது. இந்த பராபவ வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் மிகவும் மங்களகரமான குபேர யோகம் உருவாகவுள்ளது.

பொதுவாக குபேர யோகமானது சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் உருவாகும். இவ்விரு கிரகங்களும் நட்பு கிரகங்களாகும். இந்த சுப யோகம் செல்வத்தை அள்ளித் தரும். எந்த ராசிக்கு இந்த யோகம் உள்ளதோ, அந்நபர் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் பரிபூர்ண ஆசியை பெறுவார்கள்.
மேலும் இவர்களுக்கு செல்வத்திற்கோ, மகிழ்ச்சிக்கோ பஞ்சமிருக்காது. பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். இதன் மூலம் நிதி நிலை உயரும். இப்போது தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் உருவாகும் குபேர யோகத்தால், மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் உருவாகும் குபேர யோகத்தால், இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உறவினர்களிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். எப்பேற்பட்ட சவால்களையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லட்சுமி தேவியின் ஆசியால் நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் குபேர யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும். பணியிடத்தில் இதுவரை சந்தித்த பிரச்சனைகள் நீங்கும். வேலையில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். இதனால் நிதி நிலைமை இருமடங்கு உயரும். வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் குபேர யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி, நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குபேரரின் அருளால் பண வரவு சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




