Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்!
Rava Idli With Malli Chutney Recipe In Tamil: காலையில் என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் ஒரே மாதிரியான சுவையில் காலை டிபனை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை ஹோட்டல் ஸ்டைலில் ரவா இட்லியையும், மல்லி சட்னியையும் செய்து சாப்பிடுங்கள். இந்த ரவா இட்லி பஞ்சு போன்று மென்மையாக இருக்கும். மல்லிச் சட்னியும் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். இந்த காம்போவை காலையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், போட்டி போட்டு சாப்பிடுவார்கள்.

இந்த ரவா இட்லி மற்றும் மல்லி சட்னி காம்போ ரெசிபிக்கள் அபூர்வாஸ் விருந்து என்னும் யூடியூப் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு ரவா இட்லி மற்றும் மல்லி சட்னி காம்போவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா இட்லி மற்றும் மல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ரவா இட்லிக்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* முந்திரி - 6 முந்திரி
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உடைத்த முந்திரி - சிறிது
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* ரவை - 1 கப் அல்லது 1/4 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* புளிப்பில்லாத கெட்டி தயிர் - 3/4 கப்
* தண்ணீர் - 1/2 கப் + 1/2 கப்
* ஆப்பசோடா - 1 சிட்டிகை
மல்லி சட்னிக்கு..
* தேங்காய் - 1/2 மூடி
* பச்சை மிளகாய் - 4
* புளி - சிறிய துண்டு
* பொட்டுக்கடலை - 4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
மற்றும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து ப்ரை
செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு
சேர்த்து லேசாக நிறம் மாற வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் உடைத்த முந்திரியை சேர்த்து கிளறி, அத்துடன்
பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து
நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி, 1 கப் ரவையை
சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* ரவா குளிர்ந்த பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 3/4 கப்
புளிப்பில்லாத கெட்டி தயிரை சேர்த்து, அத்துடன் 1/4 கப் நீரை ஊற்றி
நன்கு கலந்து மூடி வைத்து, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னியை செய்து கொள்ளலாம். அதற்கு மிக்சர் ஜாரில்
தேங்காய், பச்சை மிளகாய், புளி, பொட்டுக்கடலை, சுவைக்கேற்ப உப்பு, 1/2
கைப்பிடி கொத்தமல்லியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான மல்லி சட்னி
தயார்.
* இறுதியாக ஊற வைத்த ரவையுடன் 1 சிட்டிகை ஆப்ப சோடாவை சேர்த்து, 1/4
கப் நீரை ஊற்றி நன்கு கலந்து விட வேண்டும்.
* பின்னர் இட்லி தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி, ப்ரை செய்த
முந்திரியை ஒவ்வொரு இட்லி குழியிலும் வைத்து, பின் கலந்து வைத்துள்ள
ரவையை குழிகளில் வைத்து, இட்லி பாத்திரத்தினுள் இட்லி தட்டை வைத்து,
10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், ரவா இட்லி தயார்.



Click it and Unblock the Notifications