Latest Updates
-
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும்
அடை தோசையும், கத்திரிக்காய் சட்னியும் எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க!
Adai Dosa With Kathirikai Chutney Recipe In Tamil: காலையில் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? வீட்டில் தோசை மாவும் இல்லையா? அப்படியானால் அடை தோசை செய்யுங்கள். இந்த அடை தோசையானது நிறைய பருப்புக்களை சேர்த்து செய்வதால், சுவையானது மட்டுமின்றி சத்தானதும் கூட.
இந்த தோசைக்கு சைடு டிஷ் டிஷ்ஷாக கத்திரிக்காய் சட்னி பிரமாதமாக இருக்கும். இந்த டிபனை ஒருமுறை செய்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் வாரம் ஒருமுறை கட்டாயம் செய்ய சொல்லிக் கேட்பார்கள். அந்த அளவில் ருசியாக இருக்கும்.

இந்த அடை தோசை மற்றும் கத்திரிக்காய் சட்னி குறித்து அபூர்வாஸ் விருந்து என்னும் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த அடை தோசை மற்றும் கத்திரிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அடை தோசைக்கு...
* பாசிப்பருப்பு - 1 கப்
* பச்சரிசி - 1 கப்
* துவரம் பருப்பு - 1/2 கப்
* மசூர் பருப்பு - 1/2 கப்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 10 சிறிய பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
சட்னிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2
* பூண்டு - 4 பல்
* கத்திரிக்காய் - 150 கிராம்
* தக்காளி - 2
* புளி - சிறிய துண்டு
* மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு, பச்சரிசி, துவரம்
பருப்பு, மசூர் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை
எடுத்து, நீரில் 2-3 முறை கழுவி, நீரை ஊற்றி, 3 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் ஊற வைத்த பருப்புக்களை சேர்த்து, அத்துடன்
பூண்டு, இஞ்சி, சீரகம், வரமிளகாய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை
மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கலந்து, தோசை மாவு பதத்திற்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* அடுத்து சட்னிக்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு சேர்த்து வறுத்து,
வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, சிறிய துண்டு புளியை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூளை சேர்த்து, குறைவான தீயில் வைத்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை போக வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கியதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சட்னியை தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
கத்திரிக்காய் சட்னி தயார்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக வார்த்து, மேலே எண்ணெய் ஊற்றி, முன்னும்
பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான அடை தோசை தயார்.



Click it and Unblock the Notifications