Latest Updates
-
வழக்கமான சாம்பார் வைக்காம இந்த மங்களூர் ஸ்டைல் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
விமானத்தில் பயணிக்கும் போது போனை ஏன் அவசியம் 'Airplane Mode'-ல் வைக்க சொல்றாங்க தெரியுமா? -
வெங்காயம் சேர்க்காத பூண்டு தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 18, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கப்போகுதாம் -
சிம்ம ராசியில் கேது-செவ்வாய் கூட்டணி.. டிசம்பர் 05 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
செவ்வாய்-கேது இணைப்பால் ஜனவரி மாதம் வரை தோல்விகளையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சுரைக்காய் இருந்தா.. இப்படி ஒருவாட்டி மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்... -
சப்பாத்தி, பூரிக்கு கேரட்டை வைச்சு இந்த பக்குவத்தில் குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
பனியால் உதடு வெடிப்பை சந்திக்குறீங்களா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
வீட்டில் டீ போடும்போது இந்த தவறுகளை தெரியமா கூட செஞ்சுராதீங்க - இல்லனா உங்க டீ வாயிலேயே வைக்கமுடியாது
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Varagu Arisi Pongal Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? இதனால் அடிக்கடி உங்கள் வீட்டில் பொங்கல் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் வெண் பொங்கல் என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் அடுத்தமுறை பொங்கல் செய்வதாக இருந்தால், அரிசியைக் கொண்டு பொங்கல் செய்யாமல் சிறுதானியங்களுள் ஒன்றான வரகரிசியைக் கொண்டு பொங்கல் செய்யுங்கள். இந்த வரகரிசி பொங்கல் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த வரகரிசி பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரகரிசி பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* வரகரிசி - 1/2 கப் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - சிறிது
* மிளகு - 1 டீஸ்பூன் (இடித்தது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் வரகரிசியை நீரில் 2-3 முறை கழுவி, நீரை ஊற்றி 1/2
மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை
சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் ஊற வைத்த வரகரிசி நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து, அத்துடன் 4 கப் நீரை
ஊற்றி, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து குக்கரை மூடி அடுப்பில்
வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் கிளறி விட
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் சேர்த்து
சூடானதும், முந்திரியை சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் இடித்த மிளகு, சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத் தூள் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வேக வைத்துள்ள வரகரிசியுடன் சேர்த்து
கிளறினால், சுவையான வரகரிசி பொங்கல் தயார்.



Click it and Unblock the Notifications
