Latest Updates
-
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
Kongu Special Paruppu Selavu Rasam Recipe in Tamil: எவ்வளவு பெரிய விருந்தாக இருந்தாலும் அது ரசம் இல்லாமல் முழுமையடையாது. ஏனெனில் வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு ரசம் சாப்பிடுவது செரிமானத்தை எளிதாக்கும். பெரும்பாலான வீடுகளில் தக்காளி ரசம், மிளகு ரசம், கொள்ளு ரசம் என வழக்கமான ரச வகைகளைத்தான் செய்வார்கள். ஒரே மாதிரியான ரசம் சாப்பிட்டு போரடித்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமான புதிய ஸ்டைல் ரசத்தை செய்ய விரும்புகிறீர்களா?

அப்படியென்றால் இந்த கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசத்தை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். இந்த கொங்கு பருப்பு செலவு ரசம் செய்தால் சாம்பார், புளிக்குழம்பு என்று எதுவுமே தேவைப்படாது. முக்கியமாக இந்த ரசத்தை செய்தால் வீட்டில் உள்ளவர்கள் ஊற்றி ஊற்றி குடிப்பார்கள். அந்த அளவில் இது அவ்வளவு ருசியாக இருக்கும். மேலும் இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இது சளி பிரச்சினை, ஜலதோஷம் மற்றும் செரிமான பிரச்சினைகள் என பல பிரச்சினைகளைக் குணப்படுத்தும்.
உங்களுக்கு கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்கு பருப்பு செலவு ரச ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 ஸ்பூன் துவரம் பருப்பு
- 1/2 ஸ்பூன் மிளகு
- 3/4 ஸ்பூன் மல்லி விதை
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 5 சின்ன வெங்காயம்
- 5 பல் பூண்டு
- 1 தக்காளி
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1/4 அங்குல அளவு புளி
- 2 ஸ்பூன் தண்ணீர்
தாளிக்க:
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1/4 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 பச்சை மிளகாய் (நறுக்கியது)
- 3 சின்ன வெங்காயம் (நறுக்கியது)
- 2 கப் தண்ணீர்
- 1 ஸ்பூன் உப்பு
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலை
செய்முறை:
- இந்த கொங்கு ஸ்பெஷல் ரசத்திற்கு முதலில் ஒரு மசாலாவை அரைக்க வேண்டும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் துவரம்பருப்பு, மிளகு, மல்லி விதை, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- இவற்றை மிதமான தீயில் சுமார் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- அதன்பின் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அவை மென்மையாகும் வரை இன்னும் சில நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிறிய துண்டு புளியைச் சேர்த்து சில நொடிகள் வதக்கவும். இதை அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவிடவும்.
- ஆறியக் கலவையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சற்று கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- அதன்பின் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெயைச் சூடாக்கவும். அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- பின்னர் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதன்பின் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் 2 கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். ரசத்தை நன்றாக கொதிக்க விடவும். ரசம் கொதிக்கத் தொடங்கியதும், அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான கொங்கு ஸ்பெஷல் செலவு ரசம் ரெடி!



Click it and Unblock the Notifications
