Just In
- 42 min ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்த்திட வேண்டும்...
- 16 hrs ago
உங்க கணவன் அல்லது காதலனுக்கு இந்த விஷயங்கள் மட்டும் தெரிஞ்சிருந்தா நீங்க கொடுத்து வச்சவங்களாம்!
- 17 hrs ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க இரத்தத்தில் சர்க்கரை ஆபத்தான அளவில் இருக்குனு அர்த்தம்... உஷார்!
- 20 hrs ago
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி அவா்கள் எங்கு இருந்தாா் தெரியுமா?
Don't Miss
- News
"உங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா?" கனல் கண்ணன் கைது.. கொந்தளித்த பாஜக அண்ணாமலை
- Finance
சர்வதேச ரெசசனை இந்தியா தோற்கடிக்குமா.. ஏற்றுமதி என்னவாகும்?
- Movies
இனி தம்பதியாக இருக்க முடியாது..கணவரை விட்டு பிரிகிறேன்..பகீர் தகவலை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்!
- Automobiles
சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!
- Sports
டி20 உலகக்கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளதா??.. ஆகாஷ் சோப்ரா கூறிய விளக்கம்.. அட இதுவும் சரிதானே?
- Technology
ஜியோக்கு போட்டியாக Airtel அறிமுகம் செய்த 2 புது திட்டம்.! இன்றே ரீசார்ஜ் செய்யுங்க.!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
சுட்ட தக்காளி பூண்டு சட்னி
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து சாப்பிட்டு போர் அடிக்கிறதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் ஈஸியான சட்னி செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய 3 பொருட்கள் இருந்தால், அதைக் கொண்டு சுவையான சட்னியை செய்யலாம். இந்த சட்னியின் ஸ்பெஷலே தீயில் சுட்டு செய்வது தான். இந்த சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு சுட்ட தக்காளி பூண்டு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுட்ட தக்காளி பூண்டு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 3
* பச்சை மிளகாய் - 3
* முழு பூண்டு - 1
* சீரகப் பொடி - 3/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் தக்காளியை மிதமான தீயில் தோல் சுருங்கும் வரை நன்கு வாட்டி எடுக்க வேண்டும்.
* தக்காளியின் தோல் சுருங்கி, உள்ளே மென்மையாக வேகும் வரை வாட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதேப் போல் பூண்டு மற்றும் பச்சை மிளகாயை மிதமான தீயில் நெருப்பில் வாட்டி எடுக்க வேண்டும்.
* பின் நெருப்பில் வாட்டிய தக்காளி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயின் தோலை நீக்கிவிட்டு, அதை ஒரு பெளலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஒரு மத்து கொண்டு மசித்துக் கொள்ளலாம் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளலாம்.
* இறுதியாக அதில் சீரகப் பொடி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் கொத்தமல்லியைத் தூவி நன்கு கிளறினால், சுவையான சுட்ட தக்காளி பூண்டு சட்னி தயார்.
Image Courtesy: hebbarskitchen